அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் செயற்குழு கூட்டம் அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தில் நேற்று 21-08-2012 அன்று மாலை 04:30 மணி முதல் நடைபெற்றது..
A E T-யின் செயலாளர் ஜனாப் M.S.தாஜுதீன் அவர்களின் பித்யோக அழைப்பினை ஏற்று அதிரை மற்றும் வெளியூர்களில் வேலை செய்யும் நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் பெருநாள் விடுப்பில் ஊரில் இருந்த இத்தருணத்தை பயன்படுத்தி இக்கூட்டத்தில் கலந்து இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பாக நல்ல பல பயனுல்ல விடயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தை AET செயலாளர் M.S. தாஜுதீன் அவர்கள் தொகுத்து வழங்கியதோடு அல்லாமல் மிகவும் அமைதியாக வந்தவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து தகுந்த பதில்களை உடனே அளித்தது குறிப்பிடத்தக்கவை.
இக்கூட்டத்தில் பின் வரும் முக்கிய செய்திகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டின் வரவு செலவு கணக்கு.
இந்த ஆண்டின் இதுவரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரம்.
பள்ளி சேர்க்கையில் நிர்வாகத்தின் தலையீடு.
Smart Fee தொடர்பான விளக்கம்.
மாணவர்களின் நடத்தை, குறிப்பாக +1 மற்றும் +2 மாணவர்களின் நடத்தை பற்றி மிக கவலையுடன் பேசப்பட்டது.
இமாம் ஷாஃபி பள்ளியின் VISION 2015 என்ற prensentation.
மார்க்க கல்வியின் அவசியம்.
பள்ளியின் ஆசிரியர்களாக மாணவ மாணவிகளை உருவாக்க நிர்வாகம் ஊக்கப்படுத்துவது.
புதிய கட்டிடத்திற்கான செலவு பற்றியும் பேசப்பட்டது.
மாணவர்களின் சேர்க்கையில் நிர்வாகத்தின் தலையீட்டால் ஒரு சில பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்ட மாணவர்களை இமாம ஷாபி பள்ளியில் சேர்த்தததால் +1 மற்றும் +2 மாணவர்களின் நடத்தைகள் சரியில்லாமல் போனதற்கு காரணம், ஆகவோ பள்ளி நிர்வாகம் இனி மாணவர் சேர்க்கையில் இனி தலையீடாது மற்றும் மாணவர் சேர்க்கைக்கு பள்ளி முதலவர் அவர்களே முழு பொறுப்பு ஏற்பார்கள் என்ற முக்கிய அறிவிப்பு இந்த கூட்டத்தின் முக்கிய செய்தி என்று சொல்லலாம்.
கருத்துப் பரிமாற்றத்தில், சகோதரர்கள் அதிரை அஹமது, இபுறாஹீம், மாஹிர், செய்யது, M. தாஜுதீன், MSM நெய்னா, சலீம், ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் M.S. தாஜுதீன் அவர்கள் பதில் அளித்தார்கள்.
பின்னர் M.S. தாஜுதீன் அவர்கள் அதிரை வலைத்தளங்களுக்காக ஓர் பிரத்யோக பேட்டி அளித்தார்கள், இதோ அதன் காணொளி.
நன்றி
:அதிரைநிருபர்
No comments:
Post a Comment