Latest News

ஜகாத் பற்றிய தெளிவான அலசல்..கேட்டு பயன்பெறுங்கள்..

நம்மில் சிலருக்கு/பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கக்கூடும்..அவைகளில் சில இக்கால ரூபாயின் மதிப்பின்படி ஜகாத்தின் கணக்கு என்ன? யாருக்கு கொடுப்பது சிறப்பு? நான் ஜகாத் கொடுக்க கடமைபட்டவரா அல்லது வாங்க கடமைபட்டவரா? பைத்துல்மாலிற்கும் ஜகாத்திற்கும் தொடர்புண்டா? இதுபோன்ற பல சந்தேகங்கலுக்கு விடை தேட கீழே உள்ள காணொளியை மறவாமல் கண்டு பிறருக்கும் எத்தி வையுங்கள்.


இந்த காணொளியில் விலக்கப்பட்ட சில முக்கிய புள்ளிகள்.
 ஜகாத்தை எப்படி கணக்கிடுவது

முதலில் உங்களிற்கான பணத்தை கூட்டுங்கள்.உதாரணத்திற்கு: வங்கியில் இருக்கும் பணம் + வியாபர பொருளின் மதிப்பு + மனைவியின் நகை(10 3/4 பவுனிற்குமேல் நகை  இருந்தால் மட்டும்) + கடன் வரவு + வீட்டுக்கு/வியாபாரத்திற்கு முன்பணம் கொடுத்தது

பிறகு உங்களிற்கான பணத்தை கழியுங்கள்.உதாரணத்திற்கு: கடன் -  வீட்டுக்கு/வியாபாரத்திற்கு முன்பணம் வாங்கியது

கூட்டப்பட்ட பணத்தோடு கழிக்கப்பட்டவேண்டிய பணத்தை கழித்ததும்(eg:1,00,000-20,000=80,000) வரும் தொகை 632 கிராம் வெள்ளியின் மதிப்பளவு இருந்தால் (இன்றைய சூழலில் சுமார் 40,000 ரூபாய் அதன் மதிப்பு).. இதற்கு மேல் உங்களிடம் பணம் இருப்பின் நீங்கள் ஜகாத் கொடுக்க கடமையானவர்கள். இல்லையேல் ஜகாத் வாங்க தகுதியானவர்கள்


வீட்டின் மதிப்பு, வீட்டில் உள்ள சாமான்களின் மதிப்பு, அசையா சொத்துக்களின் மதிப்பு ஆகியவற்றை ஜகாத் கணக்கில்  கணக்கிடத்தேவையில்லை

ஜகாத் நெருங்கிய உறவினர்களிடமிருந்து ஆரம்பிக்கவேண்டும்
வறுமை ஒழிக்க பைத்துல்மால்களுக்கு கொடுப்பதே  சிறப்பு
கை இருப்பையும், கடனையும் கூட்டி கழித்ததில் கடன்தான் அதிகமிருக்கின்றதென்றால் நாம் ஜகாத் வாங்க தகுதியானவர்கள்.

ஜகாத்தை சில்லரையாக கொடுக்காமல் மொத்தமாக கொடுப்பதே சிறப்பு
ஜகாத் வருடா வருடம் கொடுக்கப்படவேண்டும்



 அதிரைஎக்ஸ்பிரஸ்

1 comment:

  1. URDU PUNJABI BENGALI GUJARATI
    ஜகாத் கேள்விபதில் தொகுப்பு
    ஜகாத் கேள்விபதில் தொகுப்பு

    விவசாயத்திற்கு செலவு செய்த தொகையை கழித்துவிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
    நெல்லுக்கு ஜகாத் உண்டா?
    ஜகாத் கொடுக்கப்பட்ட மீண்டும் கொடுக்க தேவையில்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் கொடுக்க முடியுமா?
    ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூரியுள்ளார்களா?
    ஜகாத் என்று சொல்லிதான் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
    கடனாளிக்கு ஜகாத் கடமையா?
    ஜகாத் கொடுத்த பணத்திலிருந்து நகை வாங்கினால் அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
    தாயின் கடனை அடைக்க ஸகாத் பணத்தை செலவிடலாமா?
    பணமாக ஃபித்ரா கொடுக்கலாமா?
    ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?
    பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி விளைபவற்றிக்கு ஜகாத்?
    பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
    இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.