Latest News

  

AAMF-இன் இரண்டாம் ஆண்டு நோன்பு பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்



பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா 
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும்ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் நோன்பு பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Thameem          050-7480023      சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா
Mr. Ajmal             050-4963848      தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு முஹல்லா
Mr. Meeramohindeen    055-2320145      அல் மதரஸத்துன் நுருல் முஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Ismail                           055-6077680           கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி முஹல்லா
Mr. Mohideen                    050-5785239           மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina                          050-7397093           முகைதீன் ஜீம்மா பள்ளி முஹல்லா தரகர் தெரு
Mr. Bashir                         050-9228114           மிஷ்கீன் சாஹிப் பள்ளி முஹல்லா

அன்புடன்,
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF)
ஈத் பெருநாள் சந்திப்பு குழு
UAE

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.