பணத்திற்காக பலரை பைத்தியமாக்கிய டாக்டர்
மருத்துவர் எஸ்.கே. குப்தாவை உங்களுக்கு தெரியுமா? 2004 ஆம் வருட பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்து வழக்கம் போல் காணமல் போனவர்.குப்தா ஒரு மனநல மருத்துவர்.ஆக்ராவில் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றியவர்.
குப்தாவின் பகுதிநேர வேலை என்ன தெரியுமா? ஏதுமறியாத, அப்பாவியான,நல்ல மனநலம் உள்ள பெண்கள் குறித்து “இவள் ஒரு மனநோயாளி.என்னிடம் இரண்டாண்டுகளாக அல்லது ஐந்தாண்டுகளாக அல்லது இரண்டு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறாள்” என போலிச் சான்றிதழ் எழுதிப் கொடுப்பது தான்.
இந்தப் போலி சான்றிதழுக்காக ரூ. பத்தாயிரம், ஐந்தாயிரம் என ஆளுக்கு தகுந்தாற்போல் பேரம் பேசி வாங்கி இருக்கிறார். நல்ல மனநலம் உள்ள பெண்களை மனநோயாளி என எதற்குச் சான்றிதழ் தர வேண்டும்? இந்த சான்றிதழ் யாருக்குத் தேவைப்படும்? இந்தச் சான்றிதழ் வாங்கிக் கொள்வதால் பயனைடைவது யார்? போன்ற கேள்விகளுக்கான விடை மிகப் பயங்கரமானது
யாரை பைத்தியமாக்கனும் பணத்த கொடுங்க கச்சிதமாக முடிச்சுருவோம்இருங்க நீங்க கொடுத்த பணம் சரியாக இருக்கானு எண்ணிப் பார்த்துகிறேன்.
ம்ம் பணம் சரியா இருக்கு
பொன்னு பெரு என்ன சொன்னீங்கே அவள் ஒரு பைத்தியம்
டாக்டர் பைத்தியம் என்று வழங்கிய போலிச் சான்றிதழ்
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மீராவின் குடும்பத்தினர் ‘யாதவீர் சிங்’ என்பவருக்கு பேசியபடி பணம், நகை, ஸ்கூட்டர் அனைத்தையும் வரதட்சணையாக கொடுத்து மணமுடித்து வைத்திருக்கின்றனர் அதை வாங்கிய பின்னரும் யாதவீர் சிங் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் இச்சூழ்நிலையில் மீராவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது பொம்பள பிள்ளையை பெற்று விட்டாயே என்று இன்னும் கொடுமை அதிகமாகியிருக்கிறது.
மாமியார் வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு இறந்திருக்கிறார் அக்குடும்பம் சட்டத்திடம் சரியாக சிக்கிக் கொண்டது தண்டணை உறுதி என்று தெரிந்தவுடன் இந்த டாக்டரிடம் ஓடி இருக்கிறார்கள் இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பெண் பைத்தியம் எனது மருத்துவமனையில் தான் இருந்தார் என்று எழுதிச் சான்றிதழ் கொடுத்தின் மூலம் அவர்கள் இதை கோர்ட்டில் சமர்பித்து பைத்திக்காரப்பெண் தற்கொலை செய்துக் கொண்டார் என வழக்கின் திசையை மாற்றி வெற்றிப் பெற்று இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இந்திய நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதில்லை அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதை உடைக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீருபித்தால் எளிதாக விவாகரத்து கிடைத்து விடும். இந்தச் சட்ட நுணுக்கத்தை குப்தா பயன்படுத்திக் கொண்டார். மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பும் நபர்கள் குப்தாவை அணுகியிருக்கிறார்கள். குப்தாவும் இன்னாரது மனைவியான இவள் என விவரமாக எழுதி போலி சான்றிதழ் கொடுத்து விடுவார் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க வெறும் ஐயாயிரம் ரூபாய்!
இவ்வாறு பத்து பெண்களின் வாழ்வைப் பாழாக்கி இருக்கிறார்,இதனையே வேறு வார்த்தைகளில் விவாகரத்து தொடர்பாக பத்து நபர்களுக்கு உதவி இருப்பதாகச் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார், குப்தா. இந்த போலிச் சான்றிதழ் வழங்கும் மனநல மருத்துவரைத் தான் தெஹல்கா நிருபர் ‘ஜம்ஷெத் கான்’ கையும் களவுமாக(மேலேயுள்ள படங்கள்) ரகசியக் காமிராவில் பிடித்திருக்கின்றார்.
“அவரிடம் உம் மனைவியையும் இங்கே அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.பெயர் சொன்னால் போதும். ஸாலிட் காம் ஹோ ஜாயேகா (கச்சிதமாக வேலை முடிந்து விடும்)” என தம்பட்டம் அடித்திருக்கின்றார். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கற்பனை மனைவியின் பெயரில் போலிச் சான்றிதழ் வாங்கி விட்டார், ஜம்ஷெத்கான்.
மருத்துவரால் பாதிக்கப்பட்ட மீராவின் குடும்பத்தினார்
போராசை,பணப்பித்து, ஊழல்,லஞ்சம்,நிர்வாகக் சீர்கேடு போன்றவை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி இருந்தாலும் கூட இந்த ஆக்ரா மருத்துவரின் செயலை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் வெறும் ஊழல் பிரச்சனையாக பணப்பித்து பிடித்த மனிதரின் குற்றமாக மட்டும் இதனை அணுகக் கூடாது.
திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment