தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிவெறியின் உண்மை முகத்தை அமபலப்படுத்தி நான் ஏற்கனவே பதிவிட்டிருந்த போது நிறைய நண்பர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் அப்படியா? உண்மையா? இன்னுமா சாதிவெறி இருக்கிறதா? என்று கேட்டார்கள். இவ்வளவுக்கும் அந்த சாதிவெறியால் பாதிக்கப்பட்டவன் என் நெருங்கிய நண்பன். அதை வாசிக்க இங்கே அழுத்தவும்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது பி.பி.சி. செய்தியில் வெளியான ஒரு சம்பவத்தை பகிர்கிறேன் பாருங்கள்.
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி சத்துணவு மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சத்துணவு தயாரிப்பாளர்களாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.
இதனால், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
“இப்பிரச்சனை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றபோது, கிராம மக்களின் விருப்பத்திற்கிணங்க அவ்விரு பெண்களையும் வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்து, இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றது அரசு” என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலர் சாமுவேல்.
மேலும், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தங்கள் அமைப்பு வாதாடியதைத் தொடர்ந்து, அவர்களின் மாற்றல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டு அந்த இருவரின் ஒரு பெண் மீண்டும் அங்கே சென்று சமைக்கத் துவங்கியிருப்பதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கே சாப்பிட இன்னமும் அனுமதிக்கவில்லை” என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார் சாமுவேல்.
என்றுதான் ஒழியுமோ இந்த சாதி. ஆதிகால சித்தர் கோபமாக இப்படி பாடினார்.
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?
என்று கோபம் மேலிட்டுக் கேட்ட கேள்விக்கு ஜாதி வெறியர்கள் என்ன பதில் பேச முடியம்?
சாதாரண பலைவனத்தில் வாழ்ந்த அரேபிய பழங்குடி காட்டரபிகள் அன்றைய பெரும் வல்லரசாக இருந்த பாரசீக,ரோம் சம்ராஜியத்தை வீழ்த்திய காரணம் என்ன தெரியுமா?? இதுபோன்று நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களை இஸ்லாம் இணைத்திருந்தது.
அரேபிய வரலாற்று ஆசிரியர் ‘தபரி’ எழுதுகிறார்: பாரசீக மன்னன் ரூஸ்தமை சந்திக்க சென்ற அரேபியத்தூதராக சென்ற ‘மூகிரா’ பாரசீகத் துருப்புகளின் அருகே சென்றதும் ருஸ்தமைச் சந்திப்பதற்கு முன் அனுமதி பெறுவதற்காக அவர் நிறுத்தப்ப்ட்டார்.மூகிரா அங்கே (அதாவது ருஸ்தமின் சபைக்கு) போய்ச் சேர்ந்தபோது பொன்இழைகளால் செய்யப்பட்ட அழகான உடை அணிந்த பாரசீகர்களைக் கண்டார்.
அவர்கள் தலையில் கீரிடங்கள் அணிந்திருந்தார்கள்.சிறிது தூரம் வரை கம்பளங்கள் விரித்திருந்தார்கள்.வருபவர் அந்த தூரத்தை நடந்து கடக்க வேண்டியிருந்தது. ‘மூகிரா பின் ஷோபா’ அங்கே சென்றபோது, ருஸ்தாமின் சிம்மாசனத்தின் மீது இருந்த இருக்கை மெத்தை மேல் அமர்ந்தார். சிலபேர் ஒடிவந்து அவரைக் கிழே இழுத்து விட்டார்கள்.
மூகிரா சொன்னார்: நங்களெல்லோரும் உங்களுடைய விவேகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் உங்களை விட அதிக முட்டாள்தனமான மக்கள் இல்லை என்பதை நான் இப்போது காண்கிறேன். அரேபியர்களான நாங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். நாங்கள் போரில் தவிர யாரையும் அடிமையாக்குவதில்லை.எனவே நீங்களும் அதே போல அனுதாபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று நீங்கள் செய்த செயல்களிலிருந்து, உங்களில் சிலர்,உங்களிலேயே மற்றவர்களுக்கு எஜமானர்கள் ஆகியிருப்பதைக் கண்டேன். இது சரியான வழி அல்ல. இப்படிப்பட்ட முறைகளில் வாழும் எந்த நாடும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றார்.
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment