தாம் அடையாத ஒன்றை பிறர் அடையும்போது ஏற்படுகின்ற வெளிப்பாடு “பொறாமை” என்னும் சிந்தனையாக ஒருவரின் மனதில் ஆழமாக உருவாகின்றது. தான் ஏதே பல நூற்றாண்டுகள் இத்துனியாவில் வாழப் போகின்றோம் என்ற எண்ணத்தில் புதுசா புதுசா இதுபோன்ற தீய சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்கின்றனர். இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும்.....
அதிரையில் வசிக்கும் ஒருவர், மலேசியாவில் வசிக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்வதில்லை.....மாறாக ஒருவர் மற்றவரோடு தொடர்பில் உள்ளவர், அருகில் வசிப்பவர், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்கள் போன்றவர்களாகவே இருப்பர்.
1. ஒருவர், பிறரிடம் உள்ள “வளர்ச்சி”யைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்.
2. பிறர், எளிமையான ஒருவரிடம் உள்ள “நிம்மதி”யான வாழ்வைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்.
3. நான் தான் “நம்பர் 1” னாக இருக்க வேண்டும், பிறர் நம்பர் 1” னாக வர எனக்கு பிடிக்காது என மனக்கணக்கு போடுபவர்களும்.
4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான். அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்.
5. எனக்கு “அந்த பொருள்” கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அண்டை வீட்டுக்காரனுக்கு அறவே கிடைக்க கூடாது என்ற சிந்தனைக் கொண்டோரும்.
6. “ஆ” அவளிடம் பார்.....அழகிய புடவைகள், நகைகள் இருக்கின்றன என பெருமூச்சு இடுபவர்களும்.
7. அவனுக்குப் பார், சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்.
8. அவரின் மிகப்பெரிய வீட்டைப்பார். அழகிய தோற்றம், அதில் விலை உயர்ந்த சாதனங்கள், புதிய மாடல் கார் போன்றவற்றை எண்ணி வேதனைப்படும் “ஜெலஸ்”களும்.
9. என் கண் காணப் பிறந்த அந்தப் பொடியனைப்பார். தன் இளம் வயதில் என்னை வீட பெரிய “ஆளா”யிட்டான் என கர்வங்கொள்ளும் பெரிசுகளும்.
10. நான் தான் அந்த “தலைமை”ப் பதவிக்கு தகுதியானவன். ஆதலால் இப்போட்டிக்கு பிறர் வரக்கூடாது என்ற பேராசையில் "ஜிக் ஜாக்"காக செயல்படுவோரும்.
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
“பல்லு” இருக்கிறவன் தட்டில் வைக்கும் “பக்கோடா”வை முழுவதும் சாப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மென்று தின்பதற்கு இலகுவாக “ஈ” என்று இளித்துக்கொண்டு இருக்கும் அழகிய, வலிமையான பற்கள் இருக்கின்றன. அதுக்கு நாம் ஏன் பொறாமைக்கொள்ள வேண்டும் !?
நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
( நபியே ! ) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களைச் சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். ( திருக்குர்ஆன் 20:131 )
“நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது ” ( நூல்: அபூதாவூத் )
“தான்” என்ற அகந்தை நம்மிடம் அறவே அறுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள உங்களிடம் உள்ள “பொறாமை” என்னும் உணர்வு சற்று விலகிக் காணப்படவேண்டும். இதற்கு உங்களை பொறாமைக் கொள்ளத் தூண்டுபவர்களின் நற்சிந்தனைகள், நற்செயல்கள், அவர்களின் வெற்றி, அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தானம், அவர்களின் தொழில், அவர்களின் ஈமான் போன்றவற்றை மனதார குறிப்பாக போலித்தனம் இல்லாமல் பாராட்டி மகிழுங்கள். நீங்கள் கண்டிப்பாக அவரின் மனதில் நிலையாக இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அவரும் உங்களிடம் வசப்பட்டு விடுவார்.
பொறாமைக்காரர்களின் “பொறாமை” எனும் கொடிய தீங்கிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! என்று “துஆ” செய்தவனாக.!
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
தம்பி நிஜாம் பொறாமை என்பது தனி மனிதனை மட்டும் தாக்க வில்லை நம் சமூதாய அமைப்புகளையும் கடுமையாகவே பாதித்துள்ளது இந்த பாதிபிலிருந்து ஏக இறைவன் நாம் அனைவரையும் பாது காக்க வேண்டும்.ஆமின்
ReplyDeleteமுயல் ஆமையை வென்றதை
ReplyDeleteமூன்றாம் வகுப்பில் படித்தும்
முயலாமையால் உறக்கத்தில் இருந்து
முன்னேறியவர் மீது வெறுப்புடன்
“பொறாமமை”க் கொள்வோரின்
கண்பட்டதால் பட்ட வேதனை
கண்டு துடித்த வேளையில்
நிஜாம் கட்டுரை
நிஜம் என உரைத்தது!
என்னைப் பார்த்து ஊரில் “சும்மா” சுற்றிக் கொண்டிருக்கும் என் முன்னாள் வகுப்புத்தோழன் சொன்னான்,”யு.ஏ.இ. நிர்ந்தர சிடிசன் ஆயிட்டாயா?”என்று.என்ன ஒரு “பொறாமை”! எத்துணை காழ்ப்புணர்ச்சி!!
ச்சீ ச்சீ இவனெல்லாம் அந்தப் பொறாமை எனும் தீயினால் மேலும் அழிவான் தானே!