இன்று இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க ஆயாத்தாமாகி கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று நோன்பா இல்லையா என மக்கள் குழம்பி போயிருந்தனர் .
தமிழக தலைமை காஜி அவர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது சம்பந்தமான ஆலோசனையில் ஈடு பட்டு கொண்டிருந்தார் .
இந்நிலையில் இளையான்குடி அருகில் உள்ள சிற்றூரில் பிறை கண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு ஆரம்பம் என தமிழக தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூபி கூறினார் .
நன்றி அதிரைஎக்ஸ்பிரஸ்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் கனடாவில் இன்று 20/07/12 ரமலான் அறிவிகபட்டுளது, (ஒரு சில பள்ளிகளில் அரபி மக்கள் நேற்று இரவே நோன்பு நோற்றுவிட்டார்கள்) இந்த புனிதமான ரமலான் மாதத்தின் நல்ல அமல்களை செய்து அதிகமாக குர் ஆன் ஓதுவதற்கும்,ஐ வேலை தொழுகையை விடுபடாமல் நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் ஆரோகியத்தையும் அதற்கான நேரத்தையும் தந்தருள்வானாக, ஆமீன்...... இந்த புனித மிக்க ரமளானில் அதிகமாக துஆ செய்யுங்கள்.
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் ரமலான் முபாரக்..
அன்புடன்
மான்.எ. ஷேக்