சுகமாய் முகம் பொதித்து;
அணைத்துப்படுக்க
தலையணையும்;
சில்லெனக் காற்றும்;
இன்னும் கொஞ்சம் நேரம்
என கெஞ்சும் விழியும்;
கடுகாரத்தைக் கண்டு
முறைக்கும் கண்களும்;
அலாரத்திற்கு
அமைதிப் பேரணித்
தரும் கரமும்;
இன்னும் கொஞ்சம்;
இன்னும் கொஞ்சம்;
எத்தனை இன்பம்!
மறந்துவிட்ட மானிடனே;
நிரந்தர உறக்கம் உனக்குண்டு;
வெள்ளைத் துணி அதிலுண்டு;
சுமந்துச் செல்லத் துணையுண்டு!
எழ மறுத்த மனமும்;
தொழ மறுத்த உனையும்;
வாழ்த்தி வரவேற்க அறையுண்டு;
மண்ணறை என்ற பெயருண்டு!
கதறி நீ கரைந்தாலும்
கருணையாளன் தவிர
கேட்பர் எவருண்டு
No comments:
Post a Comment