தமிழகத்தில் கூட்டுக் குடும்பமாக உள்ளவர்களுக்கு இனி ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தனித்தனி
குடும்பமாக, தனித்தனி கதவிலக்கத்தில் தனி அடுப்பு வைத்து
வசிப்பவர்களுக்கு மட்டுமே தனித்தனி குடும்ப அட்டை கிடைக்கும். திருமணம்ஆன பின்னும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்பட்சத்தில், அந்த குடும்பத்திற்கு ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டுமே வழங்க, குடிமையியல் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது புது அட்டைகள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
வசிப்பவர்களுக்கு மட்டுமே தனித்தனி குடும்ப அட்டை கிடைக்கும். திருமணம்ஆன பின்னும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்பட்சத்தில், அந்த குடும்பத்திற்கு ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டுமே வழங்க, குடிமையியல் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது புது அட்டைகள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
புது குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ள நிலையில் குடும்ப அட்டை வழங்குவதில்கடும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து, உடனடியாக விலக்கிடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே கதவு எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டை இருந்தால் அதை போலி என அறிவித்துவிலக்கிடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 1.97 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் ஆயுளை, நடப்பு ஆண்டு முடியும் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது அறிந்ததே. இதையடுத்து, குடும்ப அட்டைகளில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்து, அட்டைகள் புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 31ம் தேதி நடந்தது.
ரேஷனில் அரிசி உள்ளிட்ட எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்களுக்கு 'நன்' என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. அதை அவர்கள் ஒரு அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்த முடியும். 'நன்' அட்டை பெற்றவர்கள் அதை புதுப்பிக்கத் தேவையில்லை. இவ்வாறு வழங்கல் துறைஅதிகாரிகள் கூறினர்.
மாநிலம் முழுவதும் 4.16 லட்சம் குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படவில்லை. புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்படாத குடும்ப அட்டைகளை போலி என அறிவித்து, அவை அனைத்தும் விலக்கப்பட்டன.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்குத் துறை அதிகாரிகள் கூறியது:விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் போலி குடும்ப அட்டைதாரர்கள் பலன் அடைந்து விடக்கூடாது என்பதற்காக, குடும்ப அட்டை வழங்குவதில் கடும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment