Latest News

தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நில அதிர்வு காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள். நிலநடுக்கம் கடுமையாக ஏற்பட்ட இந்தோனேசியா மற்றும் அதைச சுற்றியுள்ள நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் தமிழகத்திலோ, இந்திய கடலோர மாநிலங்களிலோ அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சென்னை:
சென்னையின் சில பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை, துரைப்பாக்கம், தி.நகர், கோபாலபுரம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. உயரமான கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையை சுனாமி தாக்கும்?நில நடுக்கம் காரணமாக கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாலை 4.33 மணியளவில் சுனாமி அலைகள் வந்து தாக்கும் என மத்திய பூமி அறிவியல் துறை செயலாளர் கூறியுள்ளார். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மதுரை:
இந்த நில அதிர்வு மதுரையின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
ஊட்டி:
ஊட்டி மெயின்பஜாரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், கடைகள் குலுங்கின. குன்னூரின் மதியம் 2.10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கூடலூரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவானைக்காவலில் 3 முறை நில அதிர்வு:
இந்த நில அதிர்வு திருவானைக்காவல் பகுதியில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். சின்ன காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலக பகுதி, நத்தப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
நாகையிலும் நிலஅதிர்வு:
நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவையின் ராமநாதபுரம், கீரநத்தம், சரவணன்பட்டி போன்ற பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அனல்மின்நிலையம், கப்பல் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் தூத்துக்குடி நகரில் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மெம்மேடு பகு‌தியில் நெடுஞ்சாலை அலுவலகத்துக்கு சொந்தமான கட்டடம், அலுவலகம் உள்ளது. இங்கு நில அதிர்வு உணரப்பட்டது.
வெறிச்சோடியது கன்னியாகுமரி:
கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்குபடகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சின்ன முட்டம் பகுதியில் படகு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓட்டல்களில் தங்கியுள்ள மக்கள் உடனடியாக வெளியேறும் படிஎச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மாவட்டத்தை வெளியேறி வருகின்றனர்.
கடற்கரைகள் கண்காணிப்பு:
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார்நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை:
சுமத்ரா ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. கவுகாத்தி, கோல்கட்டா, பாட்னா, விசாகபட்டினம், கொச்சி, பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் இது உணரப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு, மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்:
28
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே நில நடுக்கம் மையமாக வைத்து ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.7 ஆக பதிவானது. நாடுகளுக்கு சுனாமி எச்சரி்கை:
கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து நிக்கோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரி்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமத்ராவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக இந்திய பெருங்கடல் சுற்றியுள்ள 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.