அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
எல்லாம் வல்ல ரஹ்மானின் துணையோடும் அதிரை மக்களின் பேராதரவோடும் அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்று முடிந்த இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தினை அறிவித்திருந்தபடி சில தொழில்நுட்ப காரணங்களினால் முழுமையான நேரலையாக தர முடியவில்லை, அல்லாஹ்விற்காக பொருத்தருள்க.
அல்லாஹ் நாடியிராவிட்டால் பெண்கள், ஆண்களினும் பெரும்பான்மையாக வருகை தந்து எங்களின் இடஓதுக்கீட்டை பொய்பித்திருக்க முடியாது, எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!
அதிரையில் முதன்முதலாய் ஜமாஅத்களின் ஒத்துழைப்புடனும், தவ்ஹீத்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பேரளவில் சமூகமளித்திருந்த இந்த தவ்ஹீத் பொதுக்கூட்டத்தில்,
மௌலவி மீரான் ஸலாஹி அவர்கள் நரக வேதனை யாருக்கு? என்ற தலைப்பில் நரகம் செல்லக்கூடிய மக்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பட்டியலிட்டும் மறுமை குறித்தும் கேட்டோர் கலங்கும் வண்ணம் எச்சரித்தார்.
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்' என்ற தனதுரையில் இன்றைய சமூக சீர்கேடுகளையும் அதன் காரண காரியங்களையும் அதனை களைவது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கியும், இந்த மார்க்கத்தை வாழையடி வாழையாய் இறுதிநாள் வரை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திடம் கொண்டு சேர்க்க ஸஹாபாக்கள் செய்த தியாகங்களோடு ஒப்பீட்டு எடுத்துக் கூறி குழுமிய மக்களின் சிந்தனையினை சமூககேடுகளுக்கு எதிராய் தூண்டினார்.
மேற்காணும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் இருவரும் இயக்கவாதிகளாக இருந்தும் தங்கள் இயக்கத்தின் புகழ் பாடாமலும், அடுத்த இயக்கத்தினரை கண்ணியக் குறைவாக பேசாமலும், தாங்கள் மட்டுமே சொர்க்கம் செல்லக்கூடியவர்கள் என தங்களுக்கு தாங்களே தீர்ப்பு வழங்காமலும், எடுத்துக்கொண்ட தலைப்பினுள் மட்டும் நின்றும் அதேவேளை தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓர், தவ்ஹீத் பொதுக்கூட்டதை ஓர் முன்மாதிரி கூட்டமாய் அமைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், உள்ளங்களை தட்டியெழுப்பிய உரைகளின் காணோளி விரைவில் நமதூர் தளங்களில் பதிவேற்றப்படும்.
அதுவரை ஆறுதலாய் புகைப்படங்களின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு....
வேண்டுகோளுக்கிணங்க புகைப்படங்களை எடுத்துதவிய
சகோதரர் SMN அவர்களுக்கு நன்றி
நன்றி : அதிரை AIM
ஜாக்கின் சீர்திருத்த மாநாடும், கடைசி வரை திருந்தாத கோவை ஐயூபும்.
ReplyDeleteசமூக சீர்திருத்த மாநாடு நடத்த இருப்பதாக ஜாக் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் போஸ்டர்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
சமூகத்தில் இருக்கும் மது, சூதாட்டம், வரதற்சனை, வட்டி, பாலியல் கொடுமைகள், சிறுவர் கொடுமைகள் குடும்ப வன்முறை, தர்கா வழிபாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக மாநாடு நடத்த இருக்கும் ஜாக் என்ன ஜோக் பண்ணுகிறதா?
பொய்யையும், அவதூரையும் பரப்பித் திரியும் கோவை அய்யூப் என்ற பேக்கை கூடவே வைத்துக் கொண்டு அடுத்தவர்களை சீர்திருத்தம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?
கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். பொய் சொல்லி, அவதூறு பரப்பிய அவதூறு மன்னன் அய்யூப் மாட்டிக் கொண்ட காட்சி.
பி.ஜெ வெளிநாட்டு நிதி பெற்று மோசடி செய்தார் என்று புளுகும் இவரின் அயோக்கியத் தனத்தை இவர் யாரை ஆதாரம் காட்டிச் சொன்னாரோ அவரே இவர் பொய்யர் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.
ஜாக் போன்ற ஜோக் அமைப்பினர் முதலில் தம்முடன் இருக்கும் இது போன்ற அயோக்கியர்களை இல்லாமலாக்கிவிட்டு சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அது வரவேற்கத் தக்கது.
ஆனால் இது நடக்குர காரியமா?
அதிரை அஹ்மதுApr 26, 2012 08:11 AM
ReplyDelete'அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்' என்ற ஓர் அணியை விட்டுப் பிரியாதீர்கள் என்று இவர்களைத்தான் தடுத்துப் பார்த்தோம். பிரிந்தவர்கள் பிரிந்துகொண்டுதான் இருப்பார்கள் என்று கணித்தோம். அது நடக்கிறது, இப்போது. இனி எத்தனையோ?
அட, நம்ம அன்வர் பாயும் அல்லவா இதில் சேர்ந்துள்ளார்! இவருக்கு எல்லா அமைப்புகளும் தேவைதானே.
அதிரை அஹமத் அவர்கள் மட்டும் இருப்பது எதிலாம்? குர் ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்று இரண்டிலிருந்து மூன்றிற்குத் தாவி இருக்கும் ஜாக்ஸ் இயக்கத்தில் தானே
ReplyDelete