அஸ்ஸலாமு அலைக்கும்
. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (Aali Imraan: 104)
நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர் கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கை களை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். (At-Tawba: 67)
சகோதரர்களே வல்ல இறைவன் காட்டிய வழியில் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்று நம் அனைவரின் மனதும் சொல்கிறது .இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் ,நன்மையை ஏவி தீமையை தடுக்கும் போது தீமை செய்தவரின் மனம் புண்படுமே என்று நாம் யாரும் பார்ப்பதில்லை
சமீபத்திய கிருஸ்தவ விவாதத்தில் அல்லாஹ் சொன்ன வழியில் சத்தியத்தை எடுத்து சொன்னால் கிறிஸ்தவர்களின் மனது புண்பட்டு விட்டது அதனால் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என்று சொன்ன 10 அமைப்பினருக்கும் அல்லாஹ் குரானில் இது பற்றி எல்லாம் பேசி இருக்கிறான் என்று தெரியாதா ?
வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இதே போல் நமதூரின் ஒழுக்க மாண்புகளை பற்றி பேசும் போது அதை பேனாதவர்களின் மனது புண்படுமே என்று யாரும் யோசிக்க மாட்டோம் ஏன் எனில் அவர்கள் செய்வது தவறு என்று நம் அனைவருக்கும் தெரியும் அதை கண்டிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்வோம் .
அடுத்தவர்களின் மனது புண்படுமே என்று நினைத்து இருந்தால் 80 களின் இறுதியில் ஜெமீல் காக்கா அவர்கள் குரான் ஹதீஸை எடுத்து சென்று ஜும்மா பள்ளியில் அப்துல் காதர் ஆலீம் அவர்களிடம் சத்தியம் பேசி இருக்க மாட்டார்கள்.
ஒற்றுமையை மட்டுமே குறிக்காளாககொண்டு இருந்தால் நமது நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு துரத்தப்பட்டு இருக்க மாட்டார்கள்.நன்மையை ஏவி தீமையை தடுத்ததால் தான் தீமை செய்த அந்த மக்கா காஃபிர்கள் ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களை எதிர்த்தனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்
சகோதரர்களே தங்கள் வட்டத்தை பெரிதாக்குங்கள் யார் சொன்னாலும் ஆராய்ச்சி கண்ணுடன் நோக்குங்கள் ,தவறு இருப்பின் யாராக இருந்தாலும் கண்டியுங்கள் .இதில் இயக்க வெறி என்று பொத்தாம் பொதுவாக சொல்லாமல் யார் தீமை செய்தாலும் கண்டிக்க வேண்டுமா?வேண்டாமா என்று முடிவெடுங்கள்
தீமைக்கு எதிராக கடுமையான நிலைபாட்டை எடுத்து அல்லாஹ் காட்டிய வழியில் ஒன்றுபடுவோம்!
ReplyDeleteMust watch this video :
http://www.youtube.com/watch?v=DAEnjg1ePSA&feature=youtube_gdata_player
தீமைக்கு எதிராக கடுமையான நிலைபாட்டை எடுத்து அல்லாஹ் காட்டிய வழியில் ஒன்றுபடுவோம்!
ReplyDeleteMust watch this video :
http://www.youtube.com/watch?v=DAEnjg1ePSA&feature=youtube_gdata_player