சமிப காலமாக கேன்சர் என்னும் கொடிய நோய் மனித இனைத்தை அழித்துக் கொண்டு வருவதை தினமும் நாம் பத்தரிக்கை வாயிலாகவும் தொலைகாட்சி மூலமாகவும் நேரிலும் பார்த்தும் கேட்டும் வந்துயுள்ளோம். ஆனல் இதற்க்கு காரணம் உணவு பலக்க வலகங்கள்தான் ஒரு முக்கிய காரணம் என்கிரனர், ஆனல் இன்று மனித இனத்தை மட்டும் அல்ல பாம்பு இனத்தையும் விட்டு வைக்கவில்லை.
கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா நேரு விளையாட்டு அரங்கம் அருகில் அமைத்துள்ளது, இங்கு மான், மயில், குரங்கு பாம்பு மற்றும் பல்வேறுவிதமான உயிரினங்கள் கூண்டுக்ளில் அடைக்கப்பட்டுள்ளது.
இதில் நாகபாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், மலைப்பாம்புகள் என பல்வேறு வகையான பாம்புகள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், ஐந்து வயது உடைய ஓரு நாக பாம்புக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் ஒரு “கட்டி” ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த “கட்டி” வளர்ந்து கொண்டே வந்தது, இதனால் அந்த நாக பாம்புக்கு உணவு உண்பதிலும், சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதை கவனித்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களிடம் காட்டியதில் இது புற்றுநோயாக இருக்கும் என்று சந்தேகம் கொண்டனர்.
இதை தொடர்ந்து பாம்பின் உடம்பில் வளர்ந்து வந்த அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வன உயிரியல் பூங்கா இயக்குனர் மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவர்கள் குழு கடந்த 14- தேதி நாக பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
மயக்க மருந்து மூலம், மயக்கமடைய செய்த மருத்துவர்கள் குழுவினர் ஒரு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து பாம்பின் வயிற்றிலிருந்த நூறு கிராம் எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த நாக பாம்பு நல்ல நிலையில் உணவு உட்கொண்டு இயல்பாக சவாசிப்பதாகவும் கூறிய மருத்துவர்கள், இதுவரை வெளிநாடுகளில் தான் பாம்புகளுக்கு புற்று நோய் கட்டியை அகற்ற அருவி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது,
ஆனால், நம்நாட்டில் இப்போதுதான் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றனர். இதே பாம்புக்கு இன்னும் இரண்டு சிறிய கட்டிகள் உள்ளது என்றும் இப்போது எடுக்கப்பட்டுள்ள கட்டியை பரிசோதனை செய்த பிறகே அந்த இரண்டு கட்டியை வெளியே எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் மருத்துவர் அசோகன்.
நன்றி : நக்கீரன்
தகவல் அதிரை M.அல்மாஸ்
No comments:
Post a Comment