Latest News

இளம் வயதிலே நிறைய பணம் சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா ! தீமையா !



கல்லூரி : ஆலிம் முகமது சாலிக் என்ஜினீயரிங் கல்லூரி
இடம் : ஆவடி, சென்னை

நாணயத்திற்கு இருபக்கம் போல் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களுக்கும் இரு பக்கங்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்தால் ஒரு பக்கம் நன்மை விளைகிறது மறுபக்கம் தீமை விளைகிறது. அது இளைஞர்களுக்கே புரிந்து விட்டது.

அதனால் இளம் வயதிலே பணம் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா ?  தீமையா ? என்று என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகளிடேயே நடந்த விவாதத்தில் ( பட்டி மன்றம் ) அக்கல்லூரியின் செயலாளர் ஜனாப். எஸ். சேக் ஜமாலுதீன் அவர்கள் நடுவராக இருந்து தனது இறுதி உரையில்......

பணம் இன்றைய மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. பணம் எல்லோருக்கும் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அதிகம் சம்பாதிப்பது தப்பில்லை. அது அவர்களது திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்த விஷயம்.

பணம் நிறைய நல்லது செய்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் அடுத்தவர்களுக்கு கொடுத்து நல்லது செய்யமுடியும். பணத்தால் விளையும் நன்மைகளை பட்டியல் போடத் தொடங்கினால் அது வெகு நீளமாகும். அதுபோல் பணத்தால் உருவாக்கும் தீமைகளும் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு “ அதிகம் விளைவது.... “  என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறோம். அதனால் அதிகம் எது விளைகிறது ? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

முன்பு ஒருவர் சம்பாதித்து ஒரு குடும்பமே நடந்தது. ஒரு வீட்டில் ஒரே ஒரு பாத்ரூம்தான் இருந்தது. ஒரே ஒரு டி.வி. தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒன்றாக சாப்பிட்டர்கள். நன்றாக இருந்தார்கள்.

இன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பேர் சம்பாதிக்கிறார்கள், வீட்டிற்கு இரண்டு, மூன்று பாத்ரூம்கள். இரண்டு, மூன்று டி.வி.க்கள். சவுகரியங்கள் என்று நினைத்து மனிதர்கள் தனித்தனியாக பிரிந்தார்கள். பின்பு அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியாக அதிக பணம் சேர்ந்ததே அந்த பிரிவுக்கு காரணம்.

இளம் வயதிலே நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள், அந்த பணத்தால் எதை எல்லாம் அனுபவிக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நேற்றை பற்றிக் கவலை இல்லை. நாளையை பற்றிய நினைப்பும் இல்லை. இன்றுதான் என் கையில் இருக்கிறது அதை முடிந்த அளவு சுவையாக அனுபவித்துவிட வேண்டும் என்று அலைபாய்கிறார்கள்.

உணவில், வீடு உணவின் ஆரோக்கியத்தை மறந்து தினமும் சுவைக்கு பாஸ்ட் புட் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் உடலை குண்டாக்கி, பாஸ்ட்டாக அவர்கள் வாழ்கையை முடிக்கப் பார்க்கிறது தேவையற்ற பொழுதுபோக்குகள் அவர்கள் உடலை கெடுக்கிறது. முறையற்ற வாழ்க்கை அவர்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கிறது. அதனால் பலர் நாற்பது வயதுக்கு முன்பே நடை பிணம்போல் ஆகிவிடுகிறார்கள்.

அதிகமாக சம்பாதிக்கும் இளைஞர்கள் “ நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை என் தந்தை ஒரு வருடம் சம்பாதிக்கிறார் “ என்று கர்வத்துடன் பேசுகிறார்கள். அதனால் குடும்பத்தில் சுயமரியாதை இழப்பும், தவிப்பும், பிரிவும் உருவாகிறது. இது குடும்பத்தில் ஏற்படும் தீமை.

சமூகத்தை கணக்கிட்டு பார்த்தல், அதிக பணம் படைத்தவர்கள் – பணம் இல்லாதவர்கள் என்ற இடைவெளி தற்போது அதிகமாகிறது. பணம் படைத்தவர்கள் மென்மேலும் பணம் சேர்த்து கொண்டாடுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் மென்மேலும் ஏழையாகி திண்டாடுகிறார்கள். பணம் படைத்தவர்களின் கொண்டாட்டங்களையும், சவுகரியங்களையும் பார்த்து பணமற்றவர்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கங்கள் சமூக பிரச்சனைகளை உருவாக்கிறது.

பணம் ஒரு தரப்பினரிடம் குவியும்போது அங்கே மனித தரம் குறைகிறது பணத்தால் விளையும் தீமைக்கு பல முகங்கள் இருக்கின்றன. அதனை நாம் தினமும் ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். அந்த அடிப்படையில், “ இளம் வயதில் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது தீமையே ! “ என்று கூறுகிறேன். மேலும் இத்தீமையை குறைக்க இளைய தலைமுறைகளால் முடியும். அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு, நன்மைகள் அதிகரிக்க பாடுபட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இவ்விவாதத்தை ( பட்டி மன்றம் ) முடித்துவைக்கிறேன்.


SOURCE  :  காலை நாளிதழ்
Shakkana M. NIJAM

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.