Latest News

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – பொது அறிவிப்பு !


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012 ) அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில்,


நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்ட இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ஆலோசனைகளுக்குப்பின் சகோதரர்கள் முஹம்மது அன்சர், முஹம்மது அப்சர் மற்றும் முஹம்மது மக்சூத் ஆகியோர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு தற்சமயம் நமது தக்வா பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்பு கொள்ள இலகுவாக நமதூரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் அறிவிப்பு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

இவர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் :


முஹம்மது அன்சர் : 7418808648, 9750197162

இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )
அதிராம்பட்டினம்

1 comment:

  1. அதிரை M அல்மாஸ் தங்களின் இந்த முயர்சிக்கு என் நல் வாழ்த்துக்கள் அனைத்து முஹல்லாவாசிகளின் ஒத்துளைப்பு மிக முக்கியம்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.