Latest News

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்


சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது 

                                                  1.பால் உணவுகள் (Dairy foods):

உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
                                                    2. ஓட்ஸ் உணவுகள் (Oats)
ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான  இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. 

3. வாழைப்பழம் (Bananas):
உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)

நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
4. செர்ரி உணவுகள் (Cherries)

செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன.

The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
5. ஆளி விதைகள் (Flax seeds)

ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.

என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே?








No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.