அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
27 வருடங்களுக்கு முன் பள்ளிவாசல் கட்டப்பட்டு பூர்த்தியடையாமல் அதே நிலையிலேயே இருந்துவருகிறது. மேலும் பள்ளிவாசல் பழுதடைந்து பள்ளியை சுற்றிலும் பராமரிப்புகளின்றியும், உளுச் செய்ய, சிறுநீர்கழிக்க, கழிவு நீர் செல்வதற்கு போன்ற எந்தவிதமான வசதிகளுமின்றி 27ஆண்டு காலமாய் இருந்துவருகிறது. மேலும் மின்சாதன பொருட்களுக்கு தேவையான மின்சப்ளை சரிவர இணைப்பு கொடுக்காமல் ஆங்காங்கே வயர்கள் தொங்கிக்கொண்டும் இருக்கிறது.
இந்த ஊர் மக்கள் மீன்பிடித்தொழில் செய்துவருவதால்போதிய பணவசதி இல்லாததால் இந்த பள்ளிவாசலுக்கு தேவையான வசதிகளை செய்யமுடியாமல் தொழுகை மட்டும் நடத்திக்கொண்டுவருகிறார்கள். இந்த பள்ளிவாசல் ஈ.சி.ஆர் ரோட்டில் இருந்தும் அதிகப்பேர்களுக்கு தெரியாது. தற்பொழுது இந்த பள்ளிவாசலுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு பண வசதிகளின்றி நமது ஊர் மக்களிடம் இந்த பள்ளிவாசலை முழுமைப்படுத்த நிதி திரட்டி வழங்குமாறு கேட்டுள்ளார்கள்.
இந்த பள்ளிவாசலுக்கு தேவையான வசதிகளை மட்டும் கருத்தில் கொண்டு கட்டுமானப்பணியாளர்களிடம் செலவினங்களை கேட்டபோது இதற்க்காக தற்சமயம் 6,00000 (ஆறு லட்சம்) க்குள் இருந்தால் இந்த அவசிய தேவைகளை முடித்து இந்த பள்ளிவாசலை திறந்துவிடலாம் என்று கூறினார்கள். ஈ.சி.ஆர் ரோட்டில் இருக்கும் முகைதீன் ஜூம் ஆ பள்ளிவாசல் பயணத்தில் இருப்பவர்களுக்கும்,இந்த ஊர் மக்களுக்கும் உதவியாக இந்த இறைஇல்லத்தை கட்டிமுடிக்க உதவி செய்யுங்கள். இந்த ஊரைச்சுற்றியுள்ளவர்கள் அதிகம் மாற்றுமத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் பணவசூல் செய்யமுடியாமல் இந்த இறை இல்லத்தை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் நிதி உதவி, பொருள் உதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பள்ளிவாசலை இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த 100குடும்பங்களுக்கு மட்டுமின்றி பயணத்தில் இருப்பவர்களுக்கும் இறைவணக்கம் புரிபவர்களுக்கும் அழகிய இறை இல்லமாய் முழுமையாக கட்டிமுடிப்போம் .
“அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி பள்ளிவாசல் ஒன்றை கட்டியவருக்கு அது போன்ற ஒன்றைச் சொர்க்கத்தில் அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற உஸ்மான் ரலி அவர்கள் செவியுற்றார்கள்.
வெளிநாட்டில் உள்ள நமது இஸ்லாமிய மக்கள் அனைவரும் இதற்கென முழு முயற்சி எடுத்து தங்கள் உதவிகளை அனுப்பி இந்த இறைஇல்லத்தை முழுமையாக கட்டி முடிக்க உதவிசெய்யுஙகள். உங்களுடைய நிதியை காலேஜ் எதிரல் உள்ள டிஜிடெக் கம்ப்யூட்டரில் கொடுத்து அதற்குரிய ரசிது பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு :
9994068870, 9944499691, 9865865196, 9894501078
No comments:
Post a Comment