ஊரார் சார்பில் வேண்டுகோள் வைக்க சங்கம் அமைத்து தலைவர் புடைசூழ மனு கொடுத்தால்தான் கோரிக்கையாகுமா ? அதிரை மண்ணின் மைந்தர்கள் யார் வேண்டுமானாலும் வாழும் சூழ்நிலையினை அசல் நிலைமையை அப்படியே சொல்லவும் அதன் நன்மை தீமைகளை சுட்டிடவும் உரிமையுண்டு.
அதிகாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிரையின் பெரிய ஜும்ஆ பள்ளியின் அருகிலும் மற்றும் முன்னாள் பேருராட்சித் தலைவர் அவர்களின் தேங்காய் மண்டியின் பின்புறமும் குப்பைகள் குவிந்திருக்கும் காட்சி கண்களை உறுத்துகிறது. இது வேண்டுமென்று செய்தவைகளாக இருக்காது என்று நம்புவோமாக, இருந்தாலும் வேண்டாத குப்பைகளை வேண்டியவர்கள் எடுத்திடுவார்கள் என்ற அலட்சியப் போக்கினால் நேர்ந்த அவலம்.
இதனை பேரூராட்சியின் கவனத்திற்கு கொண்டுசெல்வது நம் கடமை அவர்களும் நிச்சயம் துரித நடவடிக்கைகள் எடுப்பதில் சலைத்தவர்கள் அல்ல என்று நிருபிக்கவும் தயாராக இருப்பவர்களே.
பொதுமக்களாகிய நமக்கு என்னதான் பங்கு ? குப்பைகள் கொட்டிட கொட்டமும், வலைக் கூண்டும் தெருவோரங்களில் இருந்தும் அங்கே கொட்டிட மனம் வரவில்லையே ஏன் ? அது அரசாங்கத்தின் உடமை என்பதாலா ? அப்படி என்றால் அதிரை தெருவோரங்கள் யாருக்குச் சொந்தமானவை ?
சிந்தியுங்கள் !, தயை கூர்ந்து குப்பைகளை கொட்டிவிட்டு அள்ள ஆள் இல்லையே என்று புலம்பாமல், சுத்தம் செய்பவர்களும் சுகாதாரத்தை விரும்புபவர்களே ஆகவே உரிய இடத்தில் சேமித்து உரியவர்கள் வரும்போது ஒப்படையுங்கள்.
சுகாதாரமே சுகமான சுவாசமாகும் !
பெரிய ஜூம்மா பள்ளி மற்றும் MMS-வாடி பின்புறம் குப்பைகள்
படங்கள் : ஆசிக்
தகவல் : முஸ்லிம் மலர் ஹசன்
தகவலுக்கு நன்றி : அதிரை BBC
No comments:
Post a Comment