Latest News

  

பேரூராட்சி அலுவலகம் - செம்மையான பராமரிப்புகள் :



1 அலுவலக வளாகத்தை எப்போதும் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருத்தல் வேண்டும்.

2. பூச்செடிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை பாங்குற  அமைத்து மனதுக்கு இதமான சூழ்நிலையில் அலுவலக வளாகத்தை பராமரித்தல் வேண்டும்.

3.அலுவலக முகப்பில், பிறப்பு இறப்பு பதிவு, குடி நீர் இணைப்பு உரிமங்கள் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் தொடர்பான நடைமுறைகளை விளக்கும் அறிவிப்பு பலகைகளை அழகுற அமைத்து, எளிதில் காணத்தக்க இடங்களில் வைத்திருத்தல் வேண்டும்.

4.   முக்கிய இடங்களை குறிப்பிடும் பேரூராட்சியின் வரைபடம் வைத்திருத்தல் வேண்டும்.

5.பணியாளர்கள் இருக்கைகள், சட்டங்கள் அழகுற அமைத்து பராமரித்தல் வேண்டும்.

6.   பொதுமக்கள் தங்களது குறைகளைப் பதிவு செய்ய வசதியாக, புகார் 
புத்தகம் எளிதில் காணத்தக்க வகையில் வைத்திருத்தல் வேண்டும்.

7.பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல் மற்றும் சம்பந்தப்பட்டவருக்கு தகவல் அளித்தல் வேண்டும்.

8.பேரூராட்சி அலுவலகத்திற்க்கு வரும் பொதுமக்களிடம், இனிமையாகவும், நட்புணர்வுடன் பலகுதல் வேண்டும்.

9.  அனைத்து பணியாளர்களுக்கும், அவர்களுக்குரிய கடமைகள் மற்றும் பொது மக்கள் குறித்த திட்டவட்டமான பணி அட்டவணை ( JOB CHART  ) தயாரித்து அதன்படி செயல்படுதல் மற்றும் அதன் விவரங்கள் குறித்து எளிதில் கண்களில் படும் இடங்களில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும்.

10.அனைத்து பணியாளருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதுடன் அவற்றை அவர்கள் தங்கள் பணி நேரத்தில் கட்டாயமாக அணிந்திருத்தலை உறுதி செய்தல்.

11.ஆவணங்களையும், பதிவேடுகளையும் அழகாகவும், நேர்த்தியாகவும் பராமரித்தல் வேண்டும்.

12.பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் (  E-Mail  ) மற்றும் வலைதள முகவரிகளை  (  Web Address  ) எளிதில் காணத்தக்க இடங்களில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும்.

இறைவன் நாடினால்  !   தொடரும்............
Source : Web Site of TNG

M. NIJAM

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.