Latest News

  

அதிசய இரட்டைத் தலை ஆண் குழந்தை!




ஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவர்களின் முழு உடலும் இணைந்து உள்ளது.
தலைகள் மட்டும் தனித் தனியாக உள்ளது. இந்த அதிசய சம்பவம நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளது.

இரட்டைத் தலைகளைக் கொண்டு ஒரு குழந்தை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது.

இரண்டு தலைகளும் சரியாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Emanoel and Jesusஎன்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர்.

பிரேசில் நாட்டிலுள்ள Anajas என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலமே இரட்டைத் தலையைக் கொண்ட இரு குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

இந்தக் குழந்தைகளுக்கு இரு மூளைகளும், இரண்டு முள்ளந்தண்டு எலும்புகளும், ஒரே ஒரு இதயமும் உள்ளன. இரண்டு தலைகள் மூலமும் உணவு வழங்கப்படுகின்றது.

இரண்டு வயிறு உள்ளதா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை.25 வயதான இரட்டைக் குழந்தைகளின் தாயான Maria de Nazareis கருத்துத் தெரிவிக்கையில்.

இந்த அதிசயமான குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Neila Dahas கருத்துத் தெரிவிக்கையில்,

குழந்தைகளின் உடல் சாதாரண குழந்தைகளின் உடல் தோற்றத்தைப் போலவே இருக்கின்றது. இரு தலைகளில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கின்றோம்.

இரண்டு தலைகளில் உள்ள மூளைகளும் வேலை செய்வதாக இருந்தால் எதை நீக்குவது என்பது குழப்பமாக உள்ளது. என்றார். 
இந்த ஆண்டு பிரேசிலில் பிறந்த இரண்டாவது இரட்டைத்தலைக் குழந்தைகளே இவர்களாவர்.

முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒக்சியன் பற்றாக்குறை காரணமாக இறந்தன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.