Latest News

  

பிள்ளைச்செல்வம் !




ஏழை எளியோர்கள், நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் அது யாராக இருந்தாலும் சரி “ பிள்ளைச் செல்வம் “ என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. இச்செல்வம் வேண்டி வேண்டாத வழிபாடுகள் இல்லை ! போகாத வழிபாட்டுத்தலங்கள் இல்லை !! செல்லாத மருத்துவமனைகள் இல்லை !!! சாப்பிடதா நாட்டு மருந்துகள் இல்லை !!! இன்னும் என்னவெல்லாம் செய்தும்.............?

எங்கெல்லாம் குடிநீர் ஆதாரங்கள் ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளனவோ அந்தப் பகுதிகளில்தான் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகம் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. மருத்துவத் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்த இக்காலக்கட்டத்தில், திருமணம் நடைபெற்ற அடுத்த சில மாதங்களுக்கிடையே குழந்தை வாய்ப்பு தள்ளிச்சென்றால் உடனடியாக பெற்றோரே தம்பதிகளை  மகப்பேறு சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.  நமது பெற்றோர்களிடம் பொறுமை இல்லை.

மகப்பேறு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ அதே அளவுக்கு குழந்தையின்மையும் அதிகரித்துவிட்டது. பிள்ளைச் செல்வத்துக்கான இந்த ஆர்வத்தை,பதற்றத்தை, வேதனையை மருத்துவத் துறையில் உள்ள சிலர் காசாக்கிடப் பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கருப்பை சுத்திகரித்தல் தொடங்கி, விந்து உயிர் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாத்திரை, சினை முட்டைக்கு மாத்திரைகள் என்று பல வழிகளில் இந்த நோயாளிகள் செலவழிக்க நேரிடுகிறது.

மருத்துவத்தின்படி இவை யாவும் அவசியமான, நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தச் சிகிச்சைக்கான கட்டணங்களுக்கும், அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அதிக விலை கொடுத்தாக வேண்டும். இந்த மாத்திரைகளின் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. அந்த அளவுக்கு லாபம் பார்க்கின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

செயற்கை கருவூட்டல் முறையை நாடுவோர் அதிகரிக்கும் வேளையில், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விழைவோரும் அதிகரித்து வருகின்றனர். செயற்கை கருவூட்டல் முறை தோல்வியுறும் பெண்களுக்கு இப்போது மருத்துவதுறையால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.

சகோதரர்களே  ! வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இஸ்லாத்தில் கடுமையாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது ( ஹராம் ).


சகோதர, சகோதரிகளே  ! அல்லாஹ் மீது நம்பிக்கை வையுங்கள், ஒருவொருகொருவர் குறை கூர்வதை தவிர்த்து, தாழ்வுமனப்பான்மையைக் கைவிடுங்கள், பொறுமையை கடைபிடியுங்கள் மனச்சோர்வை நீக்கிவிட்டு முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக பிள்ளைச்செல்வத்தை நாம் அடைந்தே தீர்வோம் !


குறிப்பு :  இன்று காலையில் வெளிவந்த ஒரு நாளிதழின் தலையங்கத்தை தற்செயலாக படிக்க நேர்ந்தது அதில் எற்பட்ட  inspiration இப் பதிவை ஏற்படுத்த நேரிட்டது.

நன்றி : சேக்கனா M. நிஜாம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.