Latest News

  

“ பேரூராட்சி “ மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ? - பகுதி - குடி நீர் வழங்கல்




சலாம் சகோதரர்களே !

சென்ற வாரம் “ பேரூராட்சியின் பொது சுகாதாரப் பணிகள் என்ன ? “ என்பதைப் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக..............

குடி நீர் வழங்கல் :-
ஐக்கிய நாடுகளின் அமைப்பிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர் தண்ணிர் வழங்கப்படலாம். ஆனால் இந்த அளவீட்டினை நடைமுறைப்படுத்துவதில் நீர் ஆதாரங்கள் ஏற்புடையவையாக அமையாததால் அனைத்து பேருராட்சிகளிலும் அமலாக்கம் செய்ய இயலவில்லை. இருப்பினும், இவ்விலக்கினை அடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டம் ( JNNURM ) , சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் ( UIDSSMT ) ஆகிய திட்டங்களின் மூலம் தண்ணிர் வழங்கல் பணிக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. நிர்ணயிக்கப்பட்ட அளவான – தினசரி தனி நபர் அளவான 70 லிட்டருக்கு குறையாமல் குடிநீர் வழங்குதலை உறுதி செய்தல்.

2. குடி நீர் ஆதாரங்களை நன்கு பராமரித்தல்.

3. குடி நீர் பகிர்மானக் குழாய்களை நன்கு பராமரித்தல் மற்றும் பழுதுகளை உடனுக்குடன் நீக்கம் செய்தல்.

4. மேல்நிலை / தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளை பதினைந்து நாட்களுக்கொருமுறை சுத்தம் செய்தல் மற்றும் அதற்குரிய விவரங்களை பதிவு செய்தல்.

5. குளோரின் கலத்தல் மற்றும் அதற்குறிய சோதனை செய்தல்.

6. மழைநீர் சேமிப்பு திட்டம் முழுமையாக அமலாகப்பட வேண்டும்.

7. நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட்டு, பராமரிகப்பட வேண்டும்.

8. கழிவு நீர் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுப்படுத்துவதை தவிர்க்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு ( தேவையினடிப்படையில் ) பரமரிக்கப்படவேண்டும்.

9. குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் போது, நீர் அளிக்கும் அளவினை கணக்கில் கொள்ள வேண்டும்.

10. அங்கீகரிக்கப்பட்ட துணை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

11. குடிநீர் கட்டணம் நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். மூன்று மாத நிலுவை தொடர்ந்தால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

12. அனுமதியற்ற குழாய் இணைப்புகளை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.

13. குடிநீர்க் குழாய் பராமரிப்புப் பணிகள் மாவட்ட நுகர்வோர் குழுவால் நினையிக்கப்பட்ட விலை விதத்திலேயே வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

14. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அளிக்கப்பட்ட விவரத்தின்படி, பின்வரும் அளவீடுகள் உள்ள குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாகும்.

n மொத்தம் கரைந்துள்ள உப்பு - 2000 மி.கி / லி
n கடினத்தன்மை - 600 மி.கி / லி
n புளோரைடு - 1.5 மி.கி / லி
n நைட்ரேட் சால்ட் - 45 மி.கி / லி
n இரும்பு உப்பு - 1.00 மி.கி / லி
n கிருமி நாசினிக்காக பிளீச்சிங் பவுடர்
கலந்தபின் குறையாமல் இருக்க வேண்டிய
குளோரின் அளவு - 0.2 மி.கி / லி

15. மாவட்ட தலைநகரங்கள் தோறும் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வுக் கூடங்களில் குடிநீர் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
16. குடிநீர் தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை குடிநீர் பகுப்பாளர் மூலம் தொலைபேசியில் தெளிவு பெறலாம். - 044 - 28412098

Source : Website of the T N G

இறைவன் நாடினால் ! தொடரும்......................
 நன்றி : சேக்கனா நிஜாம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.