யூரோ மண்டல நிதி நெருக்கடியால் ஜேர்மனியில் கோடிக்கணக்கானோர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜேர்மனி பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்றுமதி வணிகத்தை மேற்கொள்வதால் யூரோ நெருக்கடி ஜேர்மனியின் ஏற்றுமதித் தொழிலைப் கடுமையாக பாதித்துள்ளது.
இதனால் அங்கு பணியாற்றும் 4.4 மில்லியன் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று புரோக்னோஸ் கன்சல்ட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் பெரும்பாலும் போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுடன் நடைபெறுகின்றது. 1 மில்லியன் பணியாளர் இந்த நாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
ஏற்றுமதி தொழில் நலிவடைவதால் ஜேர்மனியிலும் நிதி நெருக்கடியும் வேலையிழப்பும் ஏற்படும் என்பது உறுதியாகிறது என்றாலும் BGA என்ற மொத்த வெளிநாட்டு வியாபாரம் மற்றும் சேவைப்பணிகளின் ஜேர்மன் கூட்டமைப்பு தாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஏனெனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் கூட ஏற்றுமதித் துறை வலுவாக இருப்பதாகவும் வேலைவாய்ப்புக்கு அபாயம் நேரிடாது என்றும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியால் நலிவுற்ற ஜேர்மனி இந்தியா, சீனா போன்ற பொருளாதாரச் சிறப்புள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருப்பதால் வேலையிழப்பு ஏற்படாது. ஐரோப்பாவை முழுவதுமாக நம்பியிருக்கும் அவசியம் இனி ஜேர்மனிக்குக் கிடையாது என்றும் BGA நம்பிக்கையளித்துள்ளது.

No comments:
Post a Comment