மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்ட தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் முஸ்லிம்களுக்கு பொறியியல், மருத்துவம், வேளாண்மை பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலை/முதுகலை நடப்பாண்டில் பயில்வராக இருத்தல் வேண்டும்.
புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை ( Renewal Scholarship )
கடந்த 2008-09, 2009-10, 2010-11 ஆம் ஆண்டில் புதிய கல்வி உதவித்தொகை ( Fresh ) பெற்றவர்கள் நடப்பாண்டில் ( 2011-12 ) புதுப்பித்தல் ( Renewal ) கல்வி உதவித்தொகை பெருவதருக்கு முந்தைய ஆண்டு இறுதித் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் ( மற்றும் ) பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ 2.50 இலட்சத்திற்கு மிகாமல் பெற்றிருக்கும்பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகையை பெற தகுதியுடையவர்கள் ஆவார்.
கல்வி உதவித்தொகை
படிப்புக் கட்டணம் அதிகபட்சம் ரூ 20,000/- மற்றும் பராமரிப்பு கட்டணம் விடுதியில் தங்கிப் பயில்வோருக்கு ரூ 1,000 /- வீதம் 10 மாதங்களுக்கு ரூ 10,000 / -ம், விடுதியில் தங்காமல் பயில்வோருக்கு ரூ 500/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ 5,000/- மும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் கால அவகாசம்
மாணவ / மாணவியர்கள் இணையதளத்தின் வழியே ( www.momascholarship.gov.in ) புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை ( Renewal ) விண்ணப்பத்தினை 31-12-2011 க்குள் விண்ணபிக்க வேண்டும். அதனை மாணவ-மாணவியர்கள் தங்கள் பயிலும் கல்வி நிலையத்திற்கு ஆன்லைன் மூலமாக அனுப்புதல் வேண்டும். தவிர ஆன்லைன் மூலம் பதிவுச் செய்யப்பட்ட விண்ணப்படிவம் ( மற்றும் ) தேவையான சான்றிதழ்களுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்கப்பட வேண்டும்.
மேற்படி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் இதுநாள் வரை விண்ணபிக்காமல் இருந்தால் மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 31-12-2011 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணபித்து பயனடையுமாறு சிறுபான்மையின நலத்துறை ஆணையர் அவர்கள் கேட்டுகொண்டுள்ளார்.
M. NIJAM
No comments:
Post a Comment