ஆண்டிபட்டி: காங்கிரஸ் எம்.பி. ஆரூணை முற்றுகையிட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும். அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையை மீட்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல பகுதிகளில் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு போராட்ங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் முல்லை பெரியார் அணையை முற்றுகையிட காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆரூண் தேனிக்கு வருகை தந்தார். அவர் வரும் வழியில் குன்னூர் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதாக கூறி அவரை முற்றுகையிட்டனர். அவரை தேனிக்குள் நுழையவிடாமல் திரும்பி செல்லுமாறு கோஷமிட்டனர்.
மேலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த பிரச்சனையை ஒரு வார காலத்திற்குள் முடிக்காவிட்டால் ஆரூண் எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு போரட்டத்தில் கலந்து கொள்ள கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வர்ட் பிளாக் கட்சியினரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதை அவர்கள் ஏற்காதாதல், சுமார் 100 பேரை கைது செய்தனர். பின்பு காங்கிரஸ் எம்.பி ஆரூண் கம்பம் நோக்கி செல்ல முயன்ற போது அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆருணை தேனி பழனிசெட்டிபட்டி அருகே வைத்து கைது செய்தனர்.

No comments:
Post a Comment