40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது.இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்குஇடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?
உடல் எடை அதிகரித்தல்
மன அழுத்தம்
சர்க்கரை நோய்
அதிக அளவில் கொழுப்பு சேருதல்
உயர் ரத்த அழுத்தம்
இதய நோய்
எலும்பு மூட்டு நோய்கள்
புற்று நோய்
வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :
மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும்கொழுப்புகளில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பது ஏன்?
நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.
உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.
இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?
ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.
சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.
சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்?
பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய் வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.
உடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது. அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்?
சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.
உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்?
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை, பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி. அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான் அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்?
இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது.
முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?
40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.
வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும் சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளே என்பது உலகம் அறிந்த உண்மை.
Dr.A.S.அசோக்குமார்
நன்றி : சித்தார்கோட்டை
--
No comments:
Post a Comment