Latest News

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க / திருத்த

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம்  கவனம் செலுத்த வேண்டுகோள்.....!!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, திருத்தம் நீக்கம் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 அடுத்தாண்டு  ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்குகிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை  அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.

*
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு*

சென்னையில்:சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணைய ருமானதா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: கடந்த பொதுத் தேர்தலின் போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர். பெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம்என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க  8ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்  30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*என்ன படிவம் தேவை?*


படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இதை கவனத்தில் கொண்டு தாயகத்தில் இருக்கும் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் உடனடியாக இதை செய்யத் துவங்குங்கள்.

வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம்  எண் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்படிக்கு,
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம்.
U.A.E.

குறிப்பு: கீழ்க்காணும் இணைப்பைத் தொடுத்து தேவையான விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.