வரும் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் போட்டியிட மனு செய்த 33 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய அடிப்படையில் வார்டுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்...
சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்.
01வது வார்டு. சுரைக்கா கொல்லை, சகோதரர் ஷேக் அஷ்ரப் அவர்கள்
12வது வார்டு புதுத்தெரு, சகோதரர் ஹனீபா அவர்கள்
13வது வார்டு நடுத்தெரு கீழ்புறம், சகோதரர் சம்சுதீன் அவர்கள்
14வது வார்டு நடுதெரு மேல்புறம்,சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள்
19வது வார்டு புதுமனைத் தெரு, சகோதரி செளதா அவர்கள்
21வது வார்டு C M P லேன், சகோதரர் இப்ராஹிம் அவர்கள்
நன்றி: அதிரை பிபிசி
மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தை தொடர்ந்து ஒற்றுமையை வழியுறுத்தி ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனனவருக்கும் வாழ்த்துக்கள். ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த முயற்சியை நாம் எல்லோரும் நிச்சயம் பாராட்ட வேண்டும். இது போன்று மற்ற சங்கங்களும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் போரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வேட்பாளாரை நிறுத்தி நம் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அதிரைவாசிகள் அநேகரின் ஆவல். அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோம்.
No comments:
Post a Comment