Latest News

புதுப்பட்டிணத்தில் நடந்தது என்ன?


நேற்றைய தினம் காவிக் காடயர்கள் புதுப்பட்டிணத்தில் நிகழ்த்திய வெறியாட்டம் குறித்து முதலில் கிடைத்த செய்தியினை பதிந்திருந்தோம். இன்று நேரடி களத்தொகுப்பு சுருக்கமாக...

நேற்று (22.09.2011) மாலை முஸ்லீம் சிறுவர்கள் சிலர் அபு மெட்ரிக் பள்ளி அருகே சிரித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர், அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாலிப ரவுடிகள் அந்த சிறுவர்களிடம் வலிய வந்து வீண் வம்பு செய்துள்ளனர் பின்பு அவர்களிடம் இருங்கட உங்களை வந்து ஒரு கை பார்க்கின்றோம் என மிரட்டி விட்டு முன்பே தயாராக கடல் வழியாக வரவழைக்கப்பட்டிருந்த வெளியூர் காவி பயங்கரவாதிகளை ஊருக்குள் அழைத்து வந்து டிரான்ஸ்பார்மர் லைன் மீது சைக்கிள் செயினை வீசியெறிந்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பள்ளிவாசலையும் அருகிலிருந்த 3 வீடுகளையும் கற்களை கொண்டும் அரிவாளை கொண்டும் தாக்கியுள்ளனர், இதில் பொதுமக்கள் பலரும் கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். (நாம் முன்பு பதிந்திருந்தபடி தீவைப்பு சம்பவங்கள் ஏதுமில்லை)...
 

மனித மிருகங்கள் வெறியாட்டம் நடத்தி முடித்தபின் கடல் வழியாகவே தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடந்தபோது முஸ்லீம்கள் யாரும் எதிர்தாக்குதலில் ஈடுபடவில்லை மேலும் அதற்கான அவகாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல் எல்லாம் முடிந்தபின் பட்டுக்கோட்டை DSP. அசோக்குமார் மற்றும் தஞ்சை டவுன் DSP. சிவநவநீதக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டு காவிகள் தரப்பில் இதுவரை 7 மீனவர்களை கைது செய்துள்ளனர். முஸ்லீம்கள் தரப்பில் 10 பேரை கேட்டு போலீஸார் ஜமாஅத்தினர்களை தொந்தரவு செய்து கொண்டுள்ளனர், அதாவது தாக்குதலில் முஸ்லீம்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தும் இதை கலவரமாக கணக்குக் காட்டத் துடிக்கிறது காவல்துறை.

அதிரையில் ஆர்ப்பாட்டம்
புதுப்பட்டிணத்தில் இறையில்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவி பயங்கரவாதிகளை கைது செய்யக் கோரியும், பாதுகாப்பில் கோட்டை விட்ட காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும் இன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சுமார் 2.30 மணியளவில் அதிரை முஸ்லீம்களின் திடீர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தக்வா பள்ளி முனையிலிருந்து துவங்கிய பேரணி பேரூந்து நிலையத்தின் அருகே பெருந்திரளாக ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் அப்துல்லா மற்றும் சகோதரர் சாகுல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இயக்க வேறுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேரில் எஸ்.எம்.பாக்கர்
இன்று அதிரையில் நடைபெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டதிற்காக வருகை தந்திருந்த INTJ மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச்சென்றார். ஊர் எல்லையில் எஸ்.எம்.பாக்கர், செங்கிஸ்கான், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்த ஊர் ஜமாஅத் மற்றும் பல்வேறு இயக்க சகோதரர்களும் நடந்தவற்றை விவரித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள், தேவையேற்பட்டால் புதுப்பட்டிணம் மக்களுக்காக தமிழகம் தழுவிய போரட்டமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்தனர். இறுதியாக போலீஸூடன் போராடி ஊருக்குள் சென்று பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வீடுகளை பார்வையிட்டதுடன் அவற்றை வீடியோ ஆவணமாக்கித் திரும்பியது INTJ மீடியா பரிவு.

கடைசிச் செய்தி
இன்று இரவு சுமார் 9 மணியளவில் கிடைத்த ஊர்ஜிமற்ற தகவலின் படி 2 முஸ்லீம்கள் கைது செய்யப்பாட்டுள்ளதாக தெரிகிறது.
நன்றி :
களத்தொகுப்பு
அதிரைஅமீன்
http://www.aimuaeadirai.blogspot.com/

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.