தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர், மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அதிரை நகர காங்கிரஸ் தலைவர், அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளில் கோலோச்சிய ஐம்பதாண்டுகள் அரசியல் பின்னணி கொண்ட அதிரை ம.மீ.செ. குடும்பத்திலிருந்து அதிரை நகர பேரூராட்சி சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.எம்.எம்.எஸ் பஷீர் அவர்கள் இன்று 2909௨011 வியாழக்கிழமை அதிரை பேரூராட்சி மன்றத்தில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்...
அவருடன் முஹல்லாவாசிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மேலத்தெரு,கீழத்தெரு முஹல்லாக்களில் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதிரையின் ஏனைய முஹல்லாக்களிலும் ஆதரவு கோரி நேற்று பல்வேறு முஹல்லா பிரமுகர்களையும் நேரில் சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment