கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இன்ஷாஅல்லாஹ் வருகிற ஆகஸ்ட் 13-ம் தேதி சனிக் கிழமை இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை மவ்லவி. முஃப்தி உமர் ஷரீஃப் அவர்கள் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்கள். அமீரகத்தில் வாழ்கிற தமிழ் சகோதரர்கள் பயனடைய வேண்டி, அமீரகத்தில் முதன்முதலில் துபை இஸ்லாமிய விவகாரத்துரை ஆதரவுடன் ''அல் மனார் குர்ஆன் ஸ்டடீஸ் சென்டர்'' ஏற்பாட்டில் ரமழான் மஜ்லிஸ் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது...
இந்நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் பங்கேற்பை பொறுத்துத்தான் இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்திலும் நம் தமிழ் சகோதரர்களுக்கு முன்னுரிமை அளித்து பல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வார்கள். மேலும் துபை இஸ்லாமிய விவகாரத்துரை ஆதராவோடு தமிழ் மக்களின் இஸ்லாமிய பிரச்சார மற்றும் மார்க்க சம்மந்ததான பல எதிர்கால செயல்பாடுகள் நடைபெறுவதற்கு, இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும்விதமாக, இச்செய்தி கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
குறிப்பு: இத்துடன் இந்த நிகழ்ச்சி குறித்த நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
No comments:
Post a Comment