பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அமிரகம் தழுவிய அளவில் பறந்து கிடக்கும் அதிரை சகோதரர்கள் அனைவர்களையும் ஒருங்கிணைக்கும் முதல் முயற்சியாக, ஈத் பெருநாள் அன்று (30-08-2011) டேரா துபை ஈத்கா மைதானம் அருகில் ஒன்றுகூடி ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், நமது ஊரைச் சார்ந்த தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி சுமார் 300க்கும் மேற்பட்ட அதிரை சகோதரர்கள் கலந்துகொண்டு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களிடம் முகவரி, கைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
No comments:
Post a Comment