Latest News

அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.... அதிர்ச்சி தகவல்

அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை நடக்கிறது. சூடம் ஏற்றுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அத்தனை சடங்குகளையும் செய்பவர் ஒரு முஸ்லிம் பெண். பெயர் பஷீரா. அம்மனுக்காக தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருக்கும் கிள்ளை என்கிற கிராமத்தில் இருக்கிறது `ஸ்ரீ மகா மாரியம்மன்' கோயில். வேப்ப மரம்,சூலாயுதம், சுற்றிலும் சிறுசிறு தெய்வங்களின் சிலைகள்... என   கோயில் படுஅமர்க்களம்...

`உருவ வழிபாடு கூடாது என்பதுதான் இஸ்லாம் மதத்தின் அடிப்படை. ஆனால் முஸ்லிம் பெண்ணான நீங்கள் கோயில் கட்டி பூஜை நடத்துகிறீர்கள். ஏன்? எப்படி?'
``பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு.  ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன்.
கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்'ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க'' என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் போய் வருகிறார்.
பூஜை செய்கிறீர்கள் சரி. மந்திரங்கள் சொல்வதுண்டா?
``எனக்குப் பெரிய அளவில் மந்திரங்கள் தெரியாது. ஆனால் நான் கோயில் கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர் குருக்கள் ஒருவர் எனக்குப் பூஜை செய்வதற்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
தினமும் காலை, மாலை பூஜைகள் செய்வேன். அப்போது அக்கம்பக்கத்து ஆண்கள், பெண்கள் எல்லோரும் வருவாங்க'' என்று சொல்லும் பஷீராவின் வீடு இருக்கும் தெரு முழுவதும் இந்துக்கள் மட்டும்தான். முஸ்லிம்களே இல்லை. ஓலை வேய்ந்த வீடு. ஏழ்மையான  குடும்பம்.  கணவர் ஜின்னா அதே கிராமத்தில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.
பஷீராவின் அபரிமிதமான அம்மன் வழிபாடு அவருக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. முதல் மகனுக்கு பெண் பார்க்கப் போன போது பஷீரா அம்மன் கோயில் கட்டியிருப்பது தெரிந்து பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகனுக்கு பெண் தேடும் போதும் அதே சிக்கல். நெருங்கிய சொந்தங்கள் கோபமாக இருப்பதும், கொடுக்கல் வாங்கல் இல்லாததும் பஷீராவின் குடும்பத்தை ரொம்பவும் மனம் நோக வைத்திருப்பது பேச்சில் எதிரொலிக்கிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் பஷீராவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதுண்டாம். அதைப் பற்றிக் கேட்டால், ``நான் பிறப்பால் முஸ்லிம்தான். ஆனால் அம்மன் மீது எனக்குப் பற்றுண்டு.  உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை!'' என சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசும் பஷீரா, அம்மன் படத்தை தனது வலக்கையில் `பச்சை' குத்தி `அக்மார்க்' அம்மன் பக்தையாகவே மாறியிருக்கிறார். மனைவி கோயில் கட்டி வழிபாடு நடத்துவது பற்றி கணவர் ஜின்னா என்ன சொல்கிறார்? ``கோயில் கட்டியதிலிருந்து இன்றுவரை அவர் செய்கிற எந்த வேலைக்கும் நான் குறுக்கே நிற்பதில்லை'' என்கிறார்.
இந்தக் கோயில் பற்றி கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ``மதநல்லிணக்கத்திற்கு இந்த அம்மன் கோயில் ஒரு உதாரணம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சொல்லப் போனால், பேரூராட்சி மூலம் கோயில் வளர்ச்சிக்கு முடிந்தவரை உதவி செய்கிறோம்!'' என்கிறார்.
``முஸ்லிம் பெண் கோயில்  கட்டி கும்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. கடவுளின் அருளைப் பெறுவதில் இதுதான் வழிபாட்டு முறை என்று எதையும் வரையறுக்க முடியாது!'' `கோரஸாகச் சொல்கிறார்கள். கிள்ளையைச் சேர்ந்த முகமது உசேனும், பாஸ்கரும்.
கோயிலுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கும்பாபி ஷேகத்திற்கு நாள் குறித்திருக்கிறார் பஷீரா!

இந்த செய்தி தமிழ் இதழ் ஒன்றில் வந்தவை,இணையம் வழி மக்களிடம் பரவலாக சென்றவைதான். இது போன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிரமம் பாராமல் கீழுள்ள கட்டுரையும் படியுங்கள். இதனை
மௌலவி, அ. முஹம்மது கான்பாகவி அவர்கள் தனது வலைப்பூவில் எழுதியவை.

பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றி, மதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.

ஜூலை (13) - 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார் 1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.
இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது    மொத்தத்தில் 29.24விழுக்காடு ஆகும்.
இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது 4.71 விழுக்காடு.
கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது 16.98 விழுக்காடு.
கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது 2.83 விழுக்காடு.
கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88 விழுக்காடு.
 இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8 பேர். இது மொத்தத்தில் 7.54விழுக்காடு.
இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது 0.94 விழுக்காடு.

மதம் மாறிய முஸ்லிம்கள்:
வ. எண்பழைய பெயர்பழைய பெயர்தந்தை / கணவன் பெயர்வயதுஊர்மாறிச் சென்ற மதம்
1அஃப்ரோஸ்நிவேதிதாத /பெ. நேரு4கோவைஇந்து
2ஷரஃபுந் நிசாபிரியாக/பெ. நேரு33கோவைஇந்து
3தானிஸ்தா பேகம்கீர்த்தினாத/பெ. ஹைதர் ஷரீப்28சென்னைஇந்து
4ஜமால் மைதீன்பிரதீஷ்த/பெ. சலாஹுத்தீன்23சென்னைஇந்து
5முஸஃப்பர்ரகுத/பெ. யாசீன்37சென்னைஇந்து
6மக்பூல் ஜான் (பெண்)ஐஸ்வர்யாக/பெ. சுந்தர்34சென்னைஇந்து
7அப்துல் மஜீத்மகேஷ்த/பெ. நயினார்40சென்னைஇந்து
8ஷேக் உஸ்மான்பாலகிருஷ்ணன்த/பெ. சிவன்32சென்னைஇந்து
9மும்தாஜ் பேகம்மும்தாஜ் பேகம்த/பெ. ஷானு24சென்னைகிறித்தவம்
   
இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்; இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறி, பின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.

இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்; அதே நேரத்தில், இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.

கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.

இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.

ஏன் மாறினர்?
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்?அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்ன? பெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இது? அதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!

பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள், விடுதிகள், அலுவலகங்கள் ஆகிய ஆண் - பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போ, கற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.

பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், சமுதாயம், ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம், அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம், சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம், நண்பர்கள் தரும் ஊக்கம், சினிமாத்தனமான ஹீரோயிஸம்... எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.

பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகி, அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோ, உற்றார் உறவினர் பரிதவிப்பதோ, சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால், தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் தியாகம்என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமா,நடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக, எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

அடிப்படை கோளாறு
பெற்றோர்கள், தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்; கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்; மக்களின் மனம் நோகாது, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்;கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

ஆனால், பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள், மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

இதனால், நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம், மானம், ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகை, திக்ர், நோன்பு,நல்லுரைகள் கேட்பது, நல்ல பழக்கவழக்கங்கள், நபிவழி, நல்ல நண்பர்களுடனான பழக்கம் - இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.

மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம், அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!

அத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்து,அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள், இஸ்லாமிய அமைப்புகள்,இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!

ஆக, இஸ்லாத்தைத் துறப்பதென்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்; கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்; நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.