Latest News

மனித இதயம் -அது எப்படி செயல்படுகிறது?

மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம்அமைந்துள்ளது. நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.

 இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது. கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது...

இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன.

இதயத்தின் வலப்பகுதி உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை நுரையீரலுக்கு செலுத்துகிறது.

இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு பின்பு இதயத்தின் இடப்புறத்திற்கு வருகிறது. இங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது.

இதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் (மைத்ரல் மற்றும் அயொடிக்) மற்றும் வலப்பகுதியில் இருவால்வுகள் (பல்முனரி மற்றும் மூவிதழ்) உள்ளன. இந்த நான்கு வால்வுகளும் ஒருவழி கதவு போல செயல்பட்டு இதயத்திற்குள் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்துகின்றன

மாரடைப்பு என்றால் என்ன?

கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.

இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது.

மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

நாம் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது.

பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.பெண்இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன.இந்த தாக்கம் பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.

இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

மனித இதயம் -அது எப்படி செயல்படுகிறது?
மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம்அமைந்துள்ளது.
நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது.

கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.
இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன.

இதயத்தின் வலப்பகுதி உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை நுரையீரலுக்கு செலுத்துகிறது.

இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு பின்பு இதயத்தின் இடப்புறத்திற்கு வருகிறது. இங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது.

இதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் (மைத்ரல் மற்றும் அயொடிக்) மற்றும் வலப்பகுதியில் இருவால்வுகள் (பல்முனரி மற்றும் மூவிதழ்) உள்ளன. இந்த நான்கு வால்வுகளும் ஒருவழி கதவு போல செயல்பட்டு இதயத்திற்குள் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்துகின்றன

மாரடைப்பு என்றால் என்ன?
கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.

இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது.

மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

நாம் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது.

பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.பெண்இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன.இந்த தாக்கம் பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.

இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

மாரடைப்பு வருவதற்கான காரணிகள்
புகைப்பிடித்தல்
சர்க்கரை நோய்
உயர் இரத்த அழுத்தம்
அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு(HDL) குறைவாக இருத்தல்
அதிக கொலஸ்ட்ரால்
உடல் உழைப்பு இல்லாமை
குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டுமாரடைப்பு
மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு
மரபியல் காரணிகள்.

மாரடைப்பின் அறிகுறிகள் என்ன ?
மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்.

பொதுவான அறிகுறிகள்

நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.
வியர்த்தல்,குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.
மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம்.இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.

வாந்தி , இருமல், படபடப்புமற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளித்து இறப்பும் நேரலாம்.

நோயைக் கண்டறிவது எப்படி ?

மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார்.

இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி(ECG) எடுக்கப்படுகிறது..
இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம்.ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்க.
இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் உதவும்.
மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.
எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை
கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என உறுதியாக கணித்துக் கூறும்.

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?
என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?
மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும்,மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.
மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.
சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை ,நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்..
ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

மாரடைப்பைத் தடுப்பது எப்படி?
மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.
வாழ்க்கைமுறையில் மாற்றம்

மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.
வாழ்க்கைமுறையில் மாற்றம்
அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும்,உப்பு& கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச் சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.
உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம்.
புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு,உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Thanks: Maruthuvam

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.