வக்புவாரியத்தை சீரமைப்பதுடன் வக்பு சொத்துகள் அனைத்தும் திரும்ப அதன்வசம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த தமிழக அரசின் 2011-2012ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
வக்பு வாரியம் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால், வாரியத்திற்கு வருவாய் வரும் வகையில் அதன் சொத்துக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. வாரியம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை, இதர பயன்களை அளிப்பதற்குக் கூட இயலாத நிலையில் உள்ளது. எனவே இந்த அரசு வாரியத்தின் செயல்பாடுகளை சீரமைக்க முடிவு செய்துள்ளது.
இதனால் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் திரும்ப அதன் வசம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதுடன், நிலையான வருவாய் பெறுவது உறுதி செய்யப்படும். மேலும் வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக் கொடைகளை வழங்க ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாயை வக்பு வாரியத்திற்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment