அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடையீர்:
தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) அமீரகத்திலிருக்கும் மேலத்தெரு முஹல்லா வாசிகளால் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்புடன் அதன் பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்து வருகிறது (இது தொடர்பான விரிவான தகவல் அனைத்தும் தாங்கள் யாவரும் அறிந்ததே
அல்ஹம்துலில்லாஹ் !
கடந்த மூன்று வருடமாக நமது முஹல்லா வாசிகளிடம் பித்ரு ஜகாத்தை வசூல்செய்துமுறையாக நமது முஹல்லாவில் உள்ள தேவையுடையவர்களின் இல்லங்களுக்கு முறையாக சென்று சென்றடைந்தது என்பது தாங்கள் எல்லோரும் நன்கு அறிவிர்கள். வழமைபோல் இவ்வருடமும் ரமளான் மாதத்தின் கடமைகளை சிறப்புடன் தொடர்ந்திட தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளது...
ஆதலால், இவ்வருடமும் தங்களுடைய பித்ரு ஜகாத்தை நமது முஹல்லாவாசிகள் நமது (TIYA) நிர்வாகிகளிடம் உங்களின் பித்ரு ஜகாத்தை வாரி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் அல்லாஹ்வும், ரஸுலும் கட்டளையிட்டபடி நமது முஹல்லா வாசிகளுக்கு சென்றடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேவையுடையவர்களின் இல்லங்களுக்கு கொண்டு சேர்த்திட எல்லாவகையான முயற்சிகளையும் எடுத்திருக்கிறோம். எபோதும் போல் தாங்களின் மேலான ஆதரவை அழிக்குமாறும் கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
TIYA நிர்வாகிகள்
No comments:
Post a Comment