அமெரிக்க - மேற்குலக கூட்டுப்படைகளின் இராணுவ தாக்குதலை எதிர்த்து தயார் எனவும் லிபிய ஜனாதிபதி மௌமர் கடாபி அறிவித்துள்ளார்.
இவ் அறிவித்தல் அடங்கிய புதிய பதிவு ஒன்றை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியுள்ளது. கடாபியின், 'பால் அல் அஸீசியா' இல்ல வளாகத்தில் நேட்டோ படைகள் குண்டுதாக்குதல் நடத்தியதை அடுத்து கடாபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் இவ்வீடியோ பதிவு ஒளிபரப்பட்டுள்ளது.
இவ்வீடியோவில் அவருடைய குரல் மட்டுமே ஒளிபரப்பட்டுள்ளது. 'என்னை சுற்றி விமானங்கள் பறந்து கொண்டு தான் இருக்கின்றன. வெடிகுண்டுகள் வீழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. எனது மரணம் அல்லது எனது வாழ்க்கையை பற்றி நான் சிந்திக்கவில்லை. எங்களது ஒரே நோக்கம் லிபிட்ய நாடுதான். எங்களந்து எதிர்ப்பை கைவிட மாட்டோம். சரணடைய மாட்டோம். லிபியாவை பாதுகாப்பது தான் எங்களது நோக்கம் என கடாபி இப்பதிவில் தெரிவித்துள்ளார். எனினும் கடாபியின் சபதத்தை அடுத்து திரிபொலியில் நேட்டோ படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடாபியின் பேச்சுக்களை ஒளிபரப்பும் தேசிய தொலைக்காட்சி மீது, நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 2 பேர் இறந்துள்ளதாகவும், அரசு செய்தி தொடர்பாளர் மூசா இப்ராஹிம் கூறிய தகவலை நேட்டோ மறுத்துள்ளது. தாங்கள் ஒரு போதும் லிபிய தொலைக்காட்சிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என நேட்டோ மேலும் கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 19ம் திகதிலியிருந்து நேட்டோ படைகள், லிபிய இராணுவத்திற்கு எதிரான கடுமையான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இறுதி வரை இத்தாக்குதல் நடவடிக்கையை தொடர, நேட்டோ இராணுவம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது.

No comments:
Post a Comment