சில நிகழ்வுகளைக் கேள்விப்படும்போது நமதூர் இளம் தலைமுறைமீதான அச்சமும்,நமது பொறுப்பற்ற தன்மையையும் நினைத்தால் எழும் ஆதங்கத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.
"கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போகலாமா?இல்லே ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?"
என்ற சமூக விரோத சினிமா பாடல்வரிகளுள் ஒளிந்து இருக்கும் கலாச்சாரச் சீரழிவு எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்று தெரியவில்லை. சொல்ல வரும் விசயம் இந்தப்பாடல் வரிகள் குறித்தல்ல.இந்த அவலங்கள் நமதூரில், நமது சமகாலத்தில் நம் கண்முன்னே, அடிக்கடி நடந்தேறி வருகின்றன என்பதைப் பற்றிய கவலையும் இதைக்களைவதற்கான வழிவகைகள் யாவை? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற அக்கறையும் இப்பதிவின் கருவாகும்...
தயவு செய்து இவ்விசத்தை ஒரு குடும்பத்தோடோ அல்லது தனிநபருடனோ தொடர்பு படுத்திப் பார்க்காமல்,ஊர்நலன் சார்ந்த சமூக அக்கறையுடன்கூடிய விசயமாகக் கருதவும்.
நமதூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக,மிகச்சில 'ஓடுகாலி'களைப் பற்றிய நிகழ்வுகள் நடந்தேறியது. மாமாங்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று அரிதினும் அரிதாக நடந்த இந்த அவலம், தற்போது மாதம் ஒன்று என்ற அளவில் அதிகரித்துள்ளது சற்று கவலை தரக்கூடிய விசயம்.
'ஓடிப் போகும்' நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் எல்லாம் திருமணம் தாமதமான முதிர்கன்னிகளோ,வறுமையின் கோரப்பிடியில்சிக்கியுள்ளவர்களோ அல்லர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் முதல் வசதியான கணவருடன் சில வருடங்கள் வாழ்ந்து இல்லற இன்பத்தைச் சுவைத்தவர்களும் உள்ளனர் என்பதிலிருந்து நம்மையறியாமல் எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது.
கடந்த 20-30 ஆண்டுகளாக இக்கொடுமை நடந்துவந்தாலும் அவற்றிலிருந்து நாம் படிப்பினை பெறவில்லை. இத்தகைய நிகழ்வுகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் தீவிரத்தையும் பின்விளைவுகளையும் பற்றி நாம் உணரவில்லையே என்பது வருத்தம் தருகிறது.
முந்தைய ஓடுகாலிகளின் பின்னணியில் முஸ்லிம் அல்லாதவர்களே இருந்ததை வைத்துப் பார்க்கும்போது,முஸ்லிம்களைக் கருவறுக்கும் பாசிச சக்திகளின் நீண்டகாலத் திட்டம்,நம்தூரில் கொஞ்சம் கொஞ்சமாக நடந்தேறி வருகின்றதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (தலித் ஆட்டோ ஓட்டியின் பின்னணியில் நமதூர் RSS இருந்ததும், அதுகுறித்த வழக்கை நடத்தியதும் வெளிப்படையாக அறிந்த விசயம்.) சமீப மாதங்களில் நடந்த சம்பவங்களில் இருதரப்பிலும் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ளனர் எனபதால்,சாதி,மதம்கடந்த ஒருவகை எல்லை தாண்டும் பயங்கரம் நம்மைச்சூழ்ந்துள்ளது தெரிகிறது.
அதிரையில் பன்முக கலாச்சாரத்தைப்பின்பற்றுபவர்கள் கலந்திருந்த போதிலும் பிறமதப் பெண்ணுடன் முஸ்லிம் ஆண் ஊரைவிட்டே ஓடியதாக ஒரேயொரு சம்பவம்கூட நம் கவனத்தில் வரவில்லை. அப்படி ஓடினாலும்கூட அவரைத் தேடிப்பிடித்து ஆட்கடத்தல் முதல் தீவிரவாத வழக்குகள்வரை புனையப்பட்டுச் சிறையிலடைக்கப்படுவர் என்பது வேறு விசயம்.
அறிஞர்களும் கல்வியாளர்களும் நிறைந்துள்ள அதிரையில், நம் சமுதாயத்தின் பெயரை ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கும் இந்த சட்டமீறல் நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லையா? அல்லது அதைவிட முக்கிய விசயங்களில் அவர்கள் மூழ்கியுள்ளனரா?
இவர்கள்தான் பாராமுகமாக உள்ளார்களெனில், தமிழகத்தின் பெரும்பாலான முஸ்லிம் இயங்கள் அதிரையில் கிளையோ குறைந்தபட்சம் கொடிக்கம்பமோ வைத்துள்ளனர். அவர்களும் இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. (ஓடுகாலிகளைத் தேடிப்பிடிக்க இந்த அமைப்புகளின் கிளைகளுக்கு தகவல் கொடுத்தாலே போதும். ஓடிப்போனவர்களை வலைவீசித் தேடும்வேலை பாதி மிச்சமாகும்.அரசியல்,அதிகார மட்டங்களின் தொடர்பும் இயக்கத்தவர்களுக்கு இருப்பதால் இவர்களுக்குச் சட்டபாதுகாப்பும் அதிகம்.)
இவ்வாறு எல்லைதாண்டும் ஓடுகாலிகளிடம் எத்தகையை நியாயங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.இவர்களின் துர்நடவடிக்கைளால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது.ரோசப்பட்ட பெற்றோர் ஒருசிலர், ஓடுகாலிக் குற்றவாளிகளை தண்டிக்கவும் முடியாத வகையில் நமது சட்ட நடைமுறைகள், உணர்வுகளையும் கைகளையும் கட்டிப்போட்டுள்ளன.(சமீபத்தில், "கவுரவக் கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்" என்று உச்சநீதி மன்றம் பரிந்துரை செய்தது நினைவிருக்கலாம்.)
தமது சகோதரி/மகள் கல்யாணச் சந்தையில் கண்ணியமாக கரையேறவேண்டும் என்பதற்காக தமது இளமையை அடமானம் வைத்து விட்டு விமானம் ஏறும் எமது சகோதரர்களின் உணர்வுகளையும்,குடும்பத்தாரின் கவுரவத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாமல்,திருமண கட்டுப்பாடுகளையும்,சமூக கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு, எல்லை தாண்டும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்புதான் என்ன?
எனக்குத் தெரிந்த சில தீர்வுகளை முன்வைக்கிறேன்.மேலும் அறிந்தவர்கள் தங்கள் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்:
1) சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்து, தமது சுயநலத்திற்காக ஊரை விட்டு ஓடுபவர்கள், சமூக விரோதிகளாகக் கருதப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
2) ஓடியவர் திருமணமானவராக இருப்பின் முறையற்ற உறவு, விபச்சாரம், குடும்ப வன்முறை (Domestic Violence) சமூக ஒற்றுமைக்குக்கேடு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.
3) ஓடியவர் நகை மற்றும் பணத்துடன் ஓடியிருப்பின் திருட்டு வழக்கிலும் சேர்க்க வேண்டும்.
4) குடும்பத்தார நம்பவைத்து ஏமாற்றி ஓடிச்சென்றதால் நம்பிக்கை மோசடி வழக்கிலும் சேர்க்க வேண்டும்.
பிடிக்காத கணவரை அடுத்த நிமிடமே குலா எனும் மணவிலக்கு செய்யும் உரிமையையும், விரும்பியவரோடு திருமண வாழ்க்கைப்படுவதற்கு வசதியாக பிடிக்காத வரனுக்கு எதிராக திருமணத்திற்குமுன்னரே மறுப்பு தெரிவிக்கும் உரிமையை மணப்பெண்ணுக்கு மார்க்கம் வழங்கியுள்ளது.
மார்க்கம் பரிந்துரைக்காத மணப்பெண்ணுக்கு வீடு முதல் அனைத்துவகையான வாழ்வாதார வசதிகளையும் வழங்கி,குண்டாமாத்து திருமண உறவுக்காக தங்கள் எதிர்பார்ப்புகளை தியாகம் செய்த பிறகும்,அதைப்பற்றிய கவலையின்றி ஓடும் இந்த சுயநலமிகள் சட்டப்படி தண்டனைக்குறியவர்களே.
சமூகக் கட்டமைப்புக்கு வேட்டுவைக்கும் இந்த விசயத்தில் அந்தந்த முஹல்லா பிரதிநிதிகள் கூடி,மார்க்கம் மற்றும் வல்லுனர்களின் சட்ட ஆலோசனைகளுடன் செயல்பட்டு இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓடுகாலிகள் தங்கள் சமூக எல்லை தாண்டலுக்கான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு, தமது தரப்பில் நியாயம் எதுவும் இருப்பின் நிரூபித்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் ஓடித் தொலையட்டும்.உன்னத இஸ்லாம் மார்க்கம் வழங்கியுள்ள விவாகம்/விவாக ரத்து மற்றும் வாழ்வுரிமைகளை உணராமல் சிற்றின்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து பேரிடரில் வீழத்துடிக்கும் ஓடுகாலி / ஊரோடிகளுக்கு இதைவிட அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment