Latest News

அதிரை கால்பந்துப் போட்டி 10.06.2011 - கண்ணோட்டம்

அதிரையில் AFFA நடத்திய கால் பந்தாட்டப் போட்டி நிறைவுற்று ஒரு வாரம் கூட முடியவில்லை. இன்னொரு கால் பந்தாட்டப் போட்டி நேற்று முதல் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பமானது.


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும் S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி. இடம் ஐடிஐ மைதானம்.
சூடான கோடையானாலும் மாலையில் அதிரை கடற்கரைத் தெருவை ஒட்டிய ஐடிஐ மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டியை கூட்டத்துடன் பார்ப்பது என்பதே மிக அருமையான மாலை பொழுதுபோக்கு, இது அதிரைக்கு உண்டான ஒர் சிறப்பு என்ற எண்ணத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அதிரைநிருபர் குழு சார்பாக நாமும் சென்றோம்...

முதல் அறிவிப்பின்படி ஸ்ரீரங்கம் கால்பந்து கழகம் திருச்சி vs டெம்பிள் சிட்டி மதுரை ஆகிய அணிகள் போதுவதாக இருந்தது

அறிவிப்பு செய்யப்பட்ட மதுரை அணி வராத காரணத்தால் செவன் ஸ்டார் காரைக்குடி அணியினரை மாற்று அணியாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டனர்.

துவக்க நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. பெரியவர்களும் சிறுவர்களும் அவர்களுக்கே உரிய இடங்களை வழக்கம் போல் அமர்ந்து காத்திருந்தார்கள்.

முதல் நாள் ஆட்டத்தை துவக்கி வைப்பதற்காக விருந்தினர்களும் வந்திருந்த வேலையில் ஓர் அறிவிப்பு வெளிவந்தது. அதிரையை அடுத்துள்ள பிச்சினிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த ஓர் இளைஞர் (பெயர் ஞாபகத்தில் இல்லை) 40 நிமிடம் கால்பந்தை தன் கால் மற்றும் தலையில் தட்டியே உலக சாதனை படைத்துள்ளார், இந்நிகழ்வு ஜெர்மனியில் நடைப்பெற்றது என்றதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சில நிமிடங்கள் தன் சாதனையை செய்துகாட்டி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது நம்மூருக்கு புதுசு என்று சொன்னால் மிகையில்லை.

போட்டியை அதிரை காவல்துறை ஆய்வாளர் v.செங்கமலக்கண்ணன் அவர்கள் துவக்கிவைத்து, ஒரு சிறு உரை நிகழ்த்தி கால்பந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றார்,
ஆட்டம் மந்தமாக ஆரம்பித்தாலும், அதிரையை சேர்ந்த இருவர் காரைகுடி அணியில் விளையாடுகிறார்கள் என்ற செய்தி ஆட்டத்தில் விருவிருப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு மிகுதியாகவே இருந்தது. இடைவேளையில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. வழக்கம் போல் இரண்டு பிளாஸ்டிக் வாலியில் தண்ணீர் மற்றும் எழுமிச்சை பழங்களும் விளையாட்டு வீரர்களுக்கு வந்தது.

இளைப்பார நமக்கு கிடைத்தது 15 ஆண்டுகளாக கிடைத்துவரும் அதே ருசியான பொடிபோட்ட மாங்காய், காய்ந்த பனை ஓலை ஸ்பூனுடன் பேப்பரில் மடித்து வந்த சுட சுட சுண்டல். அதே ருசி.. ஆங்காங்கே நிறைய வெள்ளை தொப்பி போட்ட மதர்ஸா மாணவர்களும் ஊர் பெருசுகளும் சிறுசுகளும் தென்பட்டார்கள்.

பகுதிநேர இடைவேளைக்கு பிறகு வந்த ஆட்டமே விருவிருப்பாக இருந்தது. ஆட்டமுடிவில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு போட்டு சமநிலையில் முடிந்ததால் டைபிரேக்கர் மூலம் முடிவு நிர்ணையிக்கப்படும் என்று அறிவிப்பு வந்ததும். தேனீக்களின் கூடு போல் ரசிகர் பெருமக்கள் வடபுறம் உள்ள கோல் போஸ்டை ஒட்டிய பகுதியில் சூழ்ந்திருந்தனர். டைப்பிரேக்கர் என்றால் எப்போதுமே இன்டிரஸ்டிங்காத்தான் இருக்கும் என்று அருகில் இருந்த ரிடைர்யடான பெருசு சொல்லியவுடனே டைப்பிரேக்கர் ஆரம்பமானது. அறிவிப்பாளர் மெம்பர் இப்றாஹிம் அவர்களின் அழகிய தொகுப்பில் போட்டியின் விருவிருப்பு மிக அதிகமானது. இறுதியில் 5 – 3 என்ற கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது.

மொத்தத்தில் இன்றை ஆட்டம் முதலில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் இறுதியில் விருவிருப்புடன் நிறைவுற்றது.


AFFA அணி எப்போதும் விளையாடும்? என்ற முனுமுனுப்பு நிறைய கால்பந்து ரசிகர்களிடமிருந்து வந்தது. இருந்தாலும் மஃரிப் தொழுகை ஆரம்பித்த பின்பும் ஆட்டத்தை நீட்டிக்கொண்டு போனதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
மீண்டும் சந்திக்கலாம், அடுத்தடுத்த போட்டிகளின் கண்ணோட்டத்தில்.

நன்றி -- அதிரைநிருபர் குழு.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.