Latest News

பலஸ்தீனயர்களின் மரண சடங்குகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது இஸ்ரேல்

இஸ்ரேல் - சிரிய எல்லையில் கூடிய பாலஸ்தீனியர்களின் பேரணியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எவ்வித ஆயுதங்களமற்று நிராயுத பாணியாக இருந்த மக்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் பதுங்கியிருந்து நடத்திய இத்தாக்குதலின் அகோரத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி படம்பிடித்து வீடீயோ காட்சிகளாக வெளியிட்டுள்ளது.


இத்துப்பாக்கிச்சூடு தாக்குதல், இஸ்ரேல், பலஸ்தீனிய முறுகல் நிலையை மேலும் அதிகரித்துள்ளது. 44 ஆண்டுகளுக்கு முன்னர், சிரியாவின் கோலன் ஹைட், பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை, காஸா ஆகிய நில பரப்புக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளினால் கைப்பற்றப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வை நினைவு கூர்ந்து நேற்று இஸ்ரேல் சிரியா எல்லையில் பலநூற்றுக்கணக்கணாக பாலஸ்தீனர்கள் ஒன்றுகூடினர்.  இதன் போதே இப்பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் 350 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் சிகிச்சை அளித்தது வருவதாகவும், வயிறு, மார்பு, தலை ஆகிய பகுதிகளை குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மறுநாள், இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது மரணசடங்குகள், சிரிய அகதிமுகாம்களில் நடத்தப்பட்ட போது இஸ்ரேலிய துருப்புக்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதிலும் பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டமஸ்கஸில் உள்ள யார்முக் அகதிகள் முகாமிலேயே மீண்டும் இவ்வன்முறை வெடித்துள்ளது.

முன்னதாக இதே போன்று லெபனான் பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேலிய துருப்புக்கள் மோதிய போது அதில் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதையடுத்து இஸ்ரேலுடனான எல்லைப்பகுதிக்கு தமது படைகளை நகர்த்தும் திட்டங்களை சிரியா லெபனான் வாபஸ் பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.