தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட உருப்படியான திட்டங்களில் சமச்சீர் கல்வி முறையும் ஒன்று என்பது பெரும்பாலான கல்வியாளர்கள் கருத்து.
'பல்வேறு விதமான பாடத் திட்டங்களை வைத்துக்கொண்டு அனைவருக்கும் பொதுவான கல்வியை எப்படித் தர முடியும்? அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத் திட்டங்கள் தேவை’ என்று கல்வியாளர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்தார்கள். பெரிய அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, இந்த முறையை அமல்படுத்தினார் கருணாநிதி.
அந்த பாடத் திட்டத்திலும் பல குறைகள் இருந்தன... பிழைகள் இருந்தன. அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அந்த பாடத் திட்டத்தையே அப்படியே தூக்கிக் குப்பையில் போடுங்கள் என்று ஜெயலலிதா உத்தரவிட்டு இருப்பதன் பின்னணி, கல்வித் துறையின் மீதான கரிசனத்தைவிட கருணாநிதி மீதான கோபம்தான் காரணமாக இருக்க முடியும்!.
“சமச்சீர்க் கல்விப் புத்தகங்களை வழங்காமல் நிறுத்திவைக்க வேண்டும். பழைய முறைப்படியான புத்தகங்களை புதிதாக அச்சிட்டு வழங்குவதற்கு ஏற்ப, பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்க வேண்டும்!'' என்ற அமைச்சரவையின் இந்தத் திடீர் அறிவிப்பால், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கால்வாசிப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பல குடும்பங்கள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வாங்கிவிட்டார்கள். இந்த நிலையில் அரசாங்கம் அறிவிப்பைச் வெளியிட்டுள்ளது...
சமச்சீர் கல்விமுறையை நிருத்திவைதிருக்கும் அரசு, “சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் உள்ள பாடங்கள், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதாக இல்லை எனவேதான் அதை நிறுத்தி வைத்திருக்கிறோம்”, என்கிறது.
சமச்சீர்க் கல்வியை ஆதரிக்கும் கல்வியாளர்கள் அரசின் முடிவுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் சமச்சீர் கல்வியை தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் துறை சார் வல்லுநர்கள் அடங்கிய குழு முடிவு செய்த பின்னர்தான், இந்தப் பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள இந்த அரசு, வல்லுநர் குழுவின் பரிந்துரை எதுவும் இல்லாமல், சமச்சீர் கல்வி முறையை நிறுத்திவைப்பது நியாயம் அல்ல!'' என்கிறார்.
. சமச்சீர் கல்வி பற்றி ஆராய்ந்து தி.மு.க. அரசுக்குப் பரிந்துரை செய்த பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் ''ஆட்சி மாறுவதற்கும் பள்ளிப் புத்தகத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது.” என்றார்.
முன்னால் முதல்வர் கலைஞரோ, நான் எழுதிய தமிழ்த்தாய் வாழ்துப்பாடல்தான் இந்த சமச்சீர் கல்விமுறையை நிறுத்தி வைக்க காரணம் என்றால் அப்பகுதியை நீக்கிவிட்டு இந்த முறையை அமுல் படுத்துங்கள் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இந்த முறை சுலபமாக கொண்டுவரப்பட்டது அல்ல கல்வித்துறை அறிஞர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி பல ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே இம்முறை கொண்டுவரப்பட்டது எனவும் தனது வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.
இது இப்படியிருக்க, சில மெட்ரிக் போர்ட நிர்வாகிகள், சமச்சீர் கல்விமுறையை எதிர்க்கின்றனர், தரமான கல்வி, மெட்ரிக் பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன, அந்த முறையை மாற்றுவது என்பது சரியல்ல,எங்கள் தரத்திற்கு சாதாரண பள்ளிகளின் கல்விமுறையை உயர்த்த முயற்சி செய்யவேண்டும்,அதை விட்டுவிட்டு, எங்களை சாதாரண பள்ளிகளுடன் கை கோர்க்க சொல்வது சரியல்ல என்பது அவர்களின் வாதம்.
சாதாரண பள்ளி நிர்வாகிகளோ, மெட்ரிக் பள்ளிகள் வியாபாரநோக்கோடு செயல் படுகின்றன 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பாடங்களை மாணவர்களுக்கு சரிவர நடத்துவதில்லை நேரடியாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்தி S.S.L.C ,மற்றும் +2 மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை அறிவை கிடைக்கப்பெறாமல் செய்து விடுகின்றனர், என்கின்றனர்.
200 கோடி செலவில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டனவே, அதன் நிலை என்ன என்றால், செலவை பற்றி கவலை படாதீர்கள் மாணவர்களின் கல்வித்தரம்தான் முக்கியம் என்கிறது, அரசு
அரசியல்வாதிகளின் கையில் சிக்கித்தவிக்கும் இந்த கல்வித்துரையால்,
பாவம் மாணவர்கள்.
No comments:
Post a Comment