சமுதாயப் புரவலரும், தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கவுரவ ஆலோசகரும், சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர் வாகியுமான கீழக்கரை மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் காக்கா (வயது 80,) இன்று காலை 8 மணியளவில் சென் னையில் காலமானார். அவ ருக்கு மனைவியும், இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ள னர்.
மறைந்த மெஜஸ்டிக் கே. வி.எம். அப்துல் கரீம் காக்கா ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலை மக்கா மஸ்ஜிதில் நடைபெற்று, நல்லடக்கம் இன்று பகல் 1மணியளவில் சென்னை ராயப்பேட்டை அமீருன்னீசா கபரஸ்தானில் நடைபெற்றது.
கே.எம்.கே. இரங்கல்...
மெஜஸ்டிக் `கரீம் காகா மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத் துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
`கரீம் காகா அவர் களின் மரணச் செய்தி நெஞ்சைத் துளைத்தது; மனம் வேதனையால் விம் மியது; இதயம் ஒன்று மில்லாத அளவுக்கு வாடி விட்டது!
தமிழக முஸ்லிம் சமு தாயத்தில் மெஜஸ்டிக் மோட்டார்ஸ் கே.வி.எம். அப்துல் கரீம் அவர்கள் தனிப்பெரும் சிறப்பும, மகிமையும், தனித்தன் மையும் பெற்று வாழ்ந்த வர் கீழக்கரை சீமானாகிய கரீம் காகா அவர்கள். ஈமானில் சீமானாகத் திகழ்ந்து எல்லாருடைய நன்மதிப் பையும் பெற்று வாழ்ந்த பெருமகன்.
வள்ளல் தன்மையில் மிக்கவர்; வர்த்தகத்தில் சீரோங்கி நின்றவர்; தமிழ கத்தில் அவர் ஈடுபடாத மஸ்ஜிது கட்டுமானம் எதுவும் நிகழ்ந்ததில்லை. இன்றைக்கு குற்றாலத் திலும், கொடைக்கானலி லும், இராமநாதபுரம் மெயின் சாலையிலும், ஹாங்காங்கிலும் என்று அவர் முன்னின்று உருவாக் கிய மஸ்ஜிதுகள் இஸ்லா மிய மார்க்கக் கலைக் கூடங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவையாகும்.
புதுக் கல்லூரி முதல் வராகத் திகழ்ந்த அப்துல் வகாப் புகாரி சாஹிபின் அருமையான மாணவர்; அவரிடம் இஸ்லாத்தை யும், இஸ்லாத்தைப் பிறரி டம் எடுத்துச் சொல்லும் நளினத்தையும் கற்றவர் காகா அவர்கள்.
காயிதெ மில்லத், சிரா ஜுல் மில்லத், ஷம்ஷீரே மில்லத் போன்ற முஸ்லிம் லீகின் முதுபெரும் தலை வர்களுடன் அந்யந்த அன்போடும், பாசத் தோடும் பழகி வந்த பெருமை அவருக்கு உண்டு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதா யத்தின் பிரதிநித்துவ சபை யாக இந்தியா முழுவதிலும் பரிணமிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய பெருந்தகை அவர்.
முஸ்லிம் லீக் அவ்வப்போது ஏற்படும் குடும்பச் சர்ச்சைகளை முன்னின்று அமைதிப் படுத்தி இயக்கத்தின் வர லாற்று ரீதியான வளர்ச் சிக்கு உறுதுணை புரிந்து வந்தார்.
கல்வித் தந்தை பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் அவர்கள் மீது அளப்பரிய அன்பும், பாசமும் கொண்டு வாழ்ந்து வந்தவர். தமிழகக் கல்விச் சாலை களின் வளர்ச்சிக்கு இவரின் ஆலோசனை மிகவும் பயன்பட்டு வந்தது.
இன்றைக்கு மும்பை யில் ஹாஜிகள் இல்லம் இருப்பதுபோல், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ஹஜ் சர்வீஸ் சொசைட்டி உருவாவதற்கு மிகப் பெரும் பணி செய்து சரித்திர சாதனை புரிந்தி ருக்கிறார்.
சென்னை புதுக் கல்லூரி நிர்வாகத் தாளாள ராகவும், மியாசி பள்ளிகள் நிர்வாகியாகவும், தேனாம் பேட்டை எத்தீம்கானா - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அத்தனை நிறுவ னங்களுக்கும் முதன்மை நிர்வாகியாக இருந்து எல் லோருக்கும் வழிகாட்டி யாக வாழ்ந்த பெருந் தகையாளர்.
இந்த எளியேன் மீது கரீம்காகா கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் நன்றி சொல்வதற்கு வார்த் தைகள் இல்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நாடு முழுவ திலும் வலிமையு டைய தாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவ ரின் விருப்பம் என்றாவது ஒருநாள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.
கரீம் காகா அவர்களின் மறைவால் வாடி வதங்கி நிற்கும் அவர்தம் குடும்பத் தாருக்கு அல்லா சப்ரன் ஜமீல் என்னும் பொறு மையைத் தந்தருள்வானாக.
காகா அவர்களின் மஃபிரத்திற்கு சமுதாயம் முழுவதும் துஆ இறைஞ் சுகிறது.
தமிழனத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் அன்பழகனுடனும் மிக நெருக்கமாக இருந்தவர். தமிழ் வளர்ச்சிக்கு காகா அவர்கள் மிகப் பெரும் புரவலராக வாழ்ந்து வந்துள்ளார். மணவை முஸ்தபா போன்றவர்கள் அறிஞர்களாக பேருதவி வழங்கு வதில் முன்னணி யில் நின்ற பெருமை அவருக்கு உண்டு.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் செய்தியில் கூறி யுள்ளார்.
தேசியத் தலைவர் இ.அஹ்மது இரங்கல்
கரீம் காக்கா மறைவு குறித்து செய்தியறிந்த தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை யமைச்சருமா இ.அஹ்மது, மறைந்த கரீம் காக்காவின் புதல்வரிடம் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு தாய்ச்சபைக்கு மறைந்த கரீம் காக்காவின் சேவை யையும், சமுதாயத்திற்கு பல் வேறு கால கட்டங்களில் அவர் ஆற்றி வந்த பணி களையும் நினைவு கூர்ந் தார்.
வல்ல இறைவனிடம் மறைந்த கரீம் காக்காவின் மஃக்பிரத்திற்காக துஆ செய்தார்.
இந்திய யூனியன் முஸ் லிம் மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பின ரும், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., உள்ளிட்ட இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் மாநில-மாவட்ட நிர்வாகி கள் பலரும் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்து அன்னாரின் மஃக்பிரத் திற்காக துஆ செய்தனர்.
ஜனஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டோர்
மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் காக்கா ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலை மக்கா மஸ்ஜிதில் நடைபெற்றது, நல்லடக் கம் சென்னை ராயப் பேட்டை அமீருன்னீசா பகரஸ்தானில் நடைபெற் றது.
முஸ்லிம் லீக் நிர்வாகிகள்
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில செயலாளர் கமுதி பஷீர், திருப்பூர் அல்தாப், மாநில அமைப்பாளர்கள், திருப்பூர் சத்தார், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் எஸ்.எம். கனி சிஷ்தி, கே.எம். நிஜாமுதீன், வட சென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ் மாயில்,
வட சென்னை மாவட் டசெயலாளர் ஏ.ஹெச். இஸ்மாயில், வட சென்னை மாவட்ட துணைத் தலை வர் ரப்பானி அப்துல் குத் தூஸ், முஸ்லிம் லீக் மூத்த தலைவர் ஜம்ஜம் பத்ருதீன், பேராசிரியர் குளச்சல் ஷாகுல் ஹமீது, மவுன் ரோடு பிரைமரி தலைவர் அய்யூப் கான்,
சமுதாய பிரமுகர்கள்
டாக்டர் கலீபத்துல்லா, டாக்டர் எஸ்.ஏ.காதிரி, டாக்டர் அமீன், வக்ஃபு போர்டு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் கான், சிராஜுல் மில்லத் மருமகன் சுல்தான், முன்னாள் எம். எல்.ஏ.,க்கள் ஹசன் அலி, எம்.ஜி.கே. நிஜாமுதீன், டாக்டர் ஹாஜா கே.மஜீத், முஸ்லிம் தொன்டு இயக் கம் மன்சூர், அப்பல்லோ ஹனீபா, ஹஜ் சர்வீஸ் சொஸைட்டி செய லாளர் அப்சல், ஏ.எம்.எஸ். கல் லூரி தாளாளர் ஷேக் நூருத்தீன், தேசிய லீக் இனா யத்துல்லா, உள்ளிட்ட சமுதாய பிரமுகர்கள் திர ளாக கலந்து கொண்டு அன்னாரின் மஃக்பிரத்திற் காக துஆ செய்தனர். சென்னை ராயப்பேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment