RSS – காவல் துறை கூட்டுச் சதி
மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசிய மர்ம நபர்கள்” என்ற செய்தியை மார்ச் 2 அன்று வாசிக்கையில், மதுரையில் பொதுவாக நிலவும் ஓர் அமைதியான சூழலைத் தகர்க்க யாரேனும் முடிவு செய்து விட்டார்களோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏனெனில், மதுரை நகரத்தில் உள்ள மசூதியில் இதே போன்றதொரு சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்துள்ளது.மதுரை நகரத்தின் மய்யத்தில் உள்ளது காஜிமார் தெரு. மிகப் பெரிய பள்ளிவாசலும், அதனைச் சுற்றிலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் இருப்பிடங்களும் நிறைந்த பகுதி இது. 2010 டிசம்பர் 29 அன்று காலையில் தொழுகைக்காக வந்த சகோதரர்கள், பள்ளிவாசலில் பன்றியின் வெட்டப்பட்ட ஒரு பகுதி கிடந்ததை கண்டனர். உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பன்றியின் உடலைப் பார்த்த முஸ்லிம்கள், மிகுந்த மன வேதனை அடைந்தனர். அங்கு வந்த காவல் துறையினர் அதனை ஒரு மூட்டையில் சுற்றி, எடுத்துச் சென்றனர். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் காவல் துறை யினரை சந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், காவல் துறையினர் இவ்வழக்கை “அற்புதமாக’ விசாரித்து நியாயம் வழங்கினர். “அங்கு கிடந்தது கோழிக்கழிவுகள்தான்; எனவே, இதைப் பிரச்சனையாக்க வேண்டாம்’ என காவல் துறையினர் கூறிவிட்டனர்.
இதே போல சில மாதங்களுக்கு முன்பு, தாராபுரம் பள்ளி வாசலின் வாயில் முன்பு பன்றியின் உறுப்புகள் அடங்கிய மூட்டை ஒன்று கிடந்தது. தாராபுரம் பிரச்சனையையும் காவல் துறையினர் கோழியென்றே முடிவு கட்டினர். காஜிமார் தெரு பள்ளிவாசலின் வாயிலில் மீண்டும் சனவரி 1, 2011 அன்று இந்த சமூகம் கொந்தளிக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதிகாலை தொழுகைக்காக வந்தவர்கள் பள்ளிவாசல் சுவற்றில் மனித மலம் பூசப்பட்டிருந்ததையும், பள்ளிவாசல் வளாகத்துக்குள்ளே மலம் வீசப்பட்டிருப்பதையும் பார்த்தவுடன் – அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே பள்ளிவாசலில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றும் திடீர் நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்கிற துப்புரவுத் தொழிலாளர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
அனைத்து “ஜமாத்து’களையும் ஒன்று திரட்டி, இதற்கு நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்கிற உணர்வு மேலெழுந்தபொழுது, “இது இந்த தெருவின் பிரச்சனை, இதில் அடுத்த ஜமாத்காரர்கள் தலையிட வேண்டாம்’ என விஷயத்தை மூடி மறைத்தார், மதுரை மத்திய தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கவுஸ் பாட்சா. அப்பகுதி மக்கள் பள்ளிவாசலுக்கு சடங்குகள் செய்து சுத்தப்படுத்தினர். இப்பின்னணியில்தான் மாட்டுத்தலை வீசப்பட்ட நிகழ்வு ஏற்படுத்திய பதற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மார்ச் 1 அன்று காலை 6.45 மணிக்கு RSS (ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் என்ற இந்து மதவெறி அமைப்பு) மாவட்டச் செயலாளர் அசோகன், அருகில் உள்ள எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். மதுரை காவல் ஆணையர் பாரி, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் குமரவேல், திலகர் திடல் துணை ஆணையர் ராஜசேகர் மற்றும் ஏராளமான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு சிறிய பிளாஸ்டிக் பை RSS அலுவலகத்தின் வாசலில் இருந்தது. பதற்றம் ஏதுமின்றி சிரித்த முகத்துடன் காவல் துறையினருடன் RSS தலைவர்கள் உரையாடினர். அதன் பிறகு காவல் துறையினர், அந்த பிளாஸ்டிக் பையை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அப்பொழுது அங்கு திரண்டிருந்த 30 தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், காவல் துறை அதிகாரி அந்த பையை RSS அசோகனிடம் இருந்து பறித்து, ஒரு துணை ஆய்வாளரிடம் வீசினார். அதன் பிறகு ஆணையர் பாரியை அங்கிருந்தவர்கள் மறித்தனர். சில வாக்குறுதிகளுக்குப் பிறகு அவர் அங்கிருந்து சென்றார்.
காவல் துறை மிக துரிதமாக அன்றே புகாரின் அடிப்பøடயில் இ.பி.கோ. 153(அ), 505(1)(இ) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இருப்பினும், RSS காரர்களின் குறிக்கோள் நிறைவேறவில்லை. அந்த மாட்டுத்தலையுடன் மதுரை நகரத்தின் முக்கிய வீதிகளில் வலம் வருவதுதான் அவர்களின் திட்டம். அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களின் அனுதாபத்தைப் பெற நினைத்தனர். ஆனால், அது நடக்கவில்லை. அந்த பிளாஸ்டிக் பை மிகச் சிறியது. அதில் இருந்தது மாட்டுத்தலைதானா என்ற கேள்வியும் இருக்கிறது. அந்த மாட்டுத்தலையின் புகைப்படத்தை இது வரை எவரும் பார்க்கவில்லை. ஆனால், அடுத்த நாள் பத்திரிகைகளில் இது முக்கிய செய்தியாக வெளிவந்தது. ஆங்கில நாளிதழ்கள் இதனை சிறிய செய்தியாக வெளியிட்டபோதும், அகில இந்திய பதிப்புகள் அனைத்திலும் இடம் பெறச் செய்தன.
சில நாட்களில் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை “வைகை ஸ்பெஷல் டீம்’ என்ற தனி போலிஸ் படையிடம் ஒப்படைத்தார் ஆணையர். வைகைப் படை தனது விசாரணையை தொடங்கியது. மசூதி பள்ளிவாசலில் பன்றியின் உறுப்புகள் காணப்பட்டபோது, அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல் துறை, RSS அலுவலகத்தின் முன்பு மாட்டுத் தலையுடன் சிறிய பிளாஸ்டிக் பையை கண்டதும் அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. அதற்காக, ஒன்றுமறியாத முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக, மனித நெறிமுறைகளின்றி எப்படி எல்லாம் துன்புறுத்துகிறது என்பதை இனி பார்ப்போம்.
மார்ச் 8 அன்று நண்பகல் 1 மணிக்கு பரகத்துல் அன்சாரி என்பவரின் ஆட்டோவில் ஒருவர் ஏறி, “கிரைம் பிராஞ்ச்’ செல்ல வேண்டும்’ என்றார். அங்கு சென்றதும் அருகில் இருந்த காவல் துறை வளாகத்துக்குள் அந்த நபர் அன்சாரியை அழைத்துச் சென்றார். அங்கு காத்திருந்த “வைகை படை’யினர், அன்சாரியை வேனில் ஏற்றி அவருடைய கண்களை கட்டினர். அடுத்து அவரது பகுதியை சேர்ந்த பாஷா எங்கு இருப்பார் என்று விசாரித்தனர். அன்சாரி, “ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்கிறீர்கள்’ என கேள்வி கேட்க, அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது. பின்பு மற்றொரு ஆய்வாளர், “நீயும் பாஷாவும் அடிக்கடி தண்ணி அடிப்பீங்கல்ல; நீ அவனை டாஸ்மாக் பாருக்கு வரச்சொல்’ என அன்சாரியை ராம் விக்டோரியா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இழுத்து வந்தனர். அங்கு, பாஷாவை செல்போனில் அழைக்குமாறு அன்சாரியை நிர்பந்தித்தனர். 5 நிமிடங்களுக்குள் பாஷா அந்த டாஸ்மாக் பாருக்குள் நுழைய, இருவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் அண்ணாமலை திரையரங்குக்கு சென்றது.
ஒரு மணி நேரம் கழித்து அல்லாஜி, அப்பாஸ் ஆகிய இருவரையும் பற்றி விசாரித்தனர். “அப்பாஸ் ஊரில் இல்லை, நாகூர் சென்றுள்ளான்’ என பாஷா பதில் அளிக்க, அவரை திரையரங்கில் விட்டு விட்டு, அன்சாரியை வாகனத்தில் ஏற்றினர். அல்லாஜியை பற்றி விவரங்களை கேட்டுத் தாக்கினர். வலி தாங்காமல் அன்சாரி, அல்லாஜியை அழைத்தார். பைபாஸ் ரோட்டில் உள்ள ஜெயசக்தி ஓட்டலுக்கு வரும்படி கூறினார். ஜெயசக்தி ஓட்டலுக்கு வந்த அல்லாஜியை மடக்கிப் பிடித்து வண்டியில் ஏற்றினர்.
வண்டியில் ஏற்றியதும் அல்லாஜியை சரமாரியாக அடித்தார்கள். அங்கிருந்து வாகனம் காந்தி மியூசியம், தெப்பக்குளம் என நகரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றது. “நீங்கள்தான் RSS அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசியவர்கள்.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment