Latest News

மனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்?

ஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி காலத்தை கடத்தி வருகிறது. உலகில் சீனா, இந்தியா தவிர்த்து 60 நாடுகளில் உயிர்கொல்லி என்டோசல்பான் மருந்துக்கு தடைவிதித்துள்ளார்கள்.

இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தமிழக அரசு சிபாரிசு செய்வது தான் அதிர்ச்சியாக உள்ளது. இந்த மருந்தின் அபாயத்தை வெளிக்கொண்டுவந்த பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன். தினமலர், தினகரன், தமிழ்முரசு என பல பத்திரிக்கைகளில் எழுதிவிட்டேன். ஆனால் எல்லாம் 10தோடு 11 தான்...


இந்த மருந்தின் கொடூரத்தை எப்படி தமிழகத்துக்கு புரியவைப்பது என்று தெரியவில்லை. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் சிபாரிசு செய்து மானியம் தருவது தான் உச்சகட்ட கொடுமை.














என்டோசல்பான் மருந்தால் அட்டப்பாடி, வயநாடு மற்றும் காசர்கோடு பகுதிகளில் வாழ்க்கையை தொலைத்தவர்கள்...
மனித உயிர்களை விட சர்வதேச மருந்துகம்பனிகளுடனான ஒப்பந்தம் தான் பெரிது என்றிருக்கும் மயிரு அரசியல்வாதிகளை கொண்ட இந்திய சனநாயகம் வாழ்க.


தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.