டெல்லி: பல சமயங்களில் சிறார்களின் விளையாட்டு விபரீதமாகி விடுவதுண்டு. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் தலை பிரஷர் குக்கரில் சிக்கிக் கொண்டு பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.
வட மேற்கு டெல்லியில் உள்ள ரானி பாக் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது 3 வயது மகன் ஷிவம். இவன் தனது வீட்டில் பிரஷர் குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.. குக்கருக்குள் தலையை விட்டு விளையாடியபோது, குக்கருக்குள் தலை சிக்கிக் கொண்டது...
இதையடுத்து அவன் தலையை எடுக்க முயன்றான். ஆனால் வரவில்லை. இதனால் வலியில் அலறினான் சிறுவன் ஷிவம். இதையடுத்து சஞ்சய் தனது மகனை எடுத்துக் கொண்டு ஒரு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு 2 மணி நேரம் கடுமையாகப் போராடிய டாக்டர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் குக்கரில் சிக்கிய தலையை வெளியில் எடுத்தனர்.
கிட்டத்தட்ட 12 டாக்டர்கள் அடங்கிய குழு கடும் போராட்டத்தில் ஈடுபட்டது, சிறுவனை பத்திரமாக மீட்பதற்காக. பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி குக்கரை விட்டு தலையை எடுக்க முயன்றனர். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றனர்.
மேலும் சிறுவனின் தலையில் பெரும் காயம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக பஞ்சையும் அதிக அளவில் பயன்படுத்தி சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டு விடாமல் தடுக்கப்பட்டது.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment