அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ ஜாபர் சாதிக் அவர்கள் Rural Development Department ல் பணியாற்றுகிறார்கள். தமிழக அரசு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினர்களுக்கு பல உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமானது Dr. மூவாளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மணப்பெண்ணின் தாயாருக்கு Rs 25000/- உதவி வழங்குகிறது (10th pass செய்திருக்கு வேண்டும்). 10 ஆம் வகுப்புக்கு கீழே படித்தவர்களுக்கு மேலும் பல திட்டங்கள் உள்ளன.
இதுபோன்ற திட்டங்களில் பல சமுதாயத்தினர்கள் பலன் அடைந்து வருகின்றனர். இதுபோன்ற உதவிகளை விட்டுவிட்டு, நம் சமூகத்தினர், ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு, உதவி வேண்டி வருவதை பார்க்கும்போது, கஷ்டமாக இருப்பதாக சகோ உணர்கிறார்கள்.
ஆகையால் நம் சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற நல திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவும். மேலதிக விளக்கங்களுக்கு சகோ ஜாபர் சாதிக் அவர்களை ajsadiq@yahoo.com இந்த மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment