இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய் தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.
குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வருகிறது.
இதய நோய்க்கு எண்ணைய் தான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது...
எனவே எண்ணைய் இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதய நோய் இருப்பவர் மட்டுமல்ல ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட எண்ணைய் பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது ஒவ்வொரு உணவிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் யோகாசெய்வதன் மூலமாகவும் குறைக்க முடியும். பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.
சென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்!
சென்னை பாரிமுனையில் பிராட்வே சாலையில் இமேஜ் ஆப்டிக்கல் என்ற கண்ணாடி ஷோரூம் அமைந்துள்ளது. அந்தப்பகுயில் வந்து செல்லும் மக்கள் தொழுவதற்கு இடம் தேடி மிகவும் சிரமப்படும் அப்பகுதி மக்களின் அவலத்தைக்கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உமர் அப்துல்லாஹ், அந்த கட்டிடத்தின் முதல் தளத்தின் ஒரு பகுதியை தொழுகை நடத்துவதற்கு பள்ளி அமைத்துக்கொள்ளலாம் என தானமாக வழங்கியிருக்கிறார். மட்டுமின்றி இனி அந்த இடத்திற்கு தானோ தன் வாரிசுகளோ உரிமை கொண்டாட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்த இடம் அங்கு வந்துசெல்லும் மக்கள் தொழுவதற்கு நல்ல முறையில் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கேராளாவில் இயங்கி வரும் “மர்கஸூஸ் தக்காபஸூஸ் சுன்யா” என்ற எத்தீம் கானா அமைப்பு நிர்வாகிகள் உமர் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள். அங்கே நாங்கள் கடை கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை எங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என இவர்கள் கேட்க, அவர்களுக்காக அந்த கட்டிடத்தின் 3 மற்றும் 4வது தளங்களை முழுமையாக விட்டுக்கொடுத்து விட்டு டெல்லிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் உமர் அப்துல்லாஹ்.
இந்த நிலையில் கேரள அமைப்பினரால் அந்தக் கட்டிடத்திற்கு அல்-அல்ஹாஜ்.மன்சூர் என்பவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த கேரள அமைப்பினர் தொழுகை நடந்து வரும் இரண்டாவது தளத்தையும் அபகரிக்க நினைத்து மன்சூர் மூலமாக அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
எப்படியாவது இங்கே தொழுபவர்களை விரட்டியடித்து விட்டு இந்தப் பள்ளியை அபகரித்து யாருக்காவது விற்றுவிடலாம் என திட்டமிட்ட இந்த அல்ஹாஜி சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை சீனிவாசன் என்பவர் வர்ஷலட்சுமி என்ற பெயரில் வட்டிக்கடை நடத்துவதற்கு விற்று விட்டாராம். விற்றவருக்கு இடத்தை ஒப்படைப்பதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் பயன்படுத்தியிருக்கிறார் இந்த அல்ஹாஜி.
காரணம் பூக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக யாரும் தொழவர மாட்டார்கள் என நினைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப்பள்ளிக்குள் இருந்த பாய், குர்ஆன், தொழுகை விரிப்பு, தஸ்பீக் மணிகள் மற்றும் கடிகாரம் என அனைத்துப்பொருட்களையும் இரவோடு இரவாக மூட்டைக்கட்டி கீழே இருக்கும் சுரங்க அறையில் வைத்துப்பூட்டிவிட்டு பள்ளிவாசலுக்கு வேறு பூட்டு போட்டு பூட்டி சென்று விட்டார் இந்த அல்ஹாஜ். மறுநாள் மதியம் பள்ளிவாசல் பூட்டப்பட்ட செய்தி அறிந்த பொதுமக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு விசயத்தை அறிவித்தனர்.
உடனடியாக களமிறங்கிய தலைமை பூக்கடை கிளையைத் தொடர்பு கொண்டு இந்த விசயத்தை அனுகுமாறு அறிவித்தது. அத்தோடு தென்சென்னை வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் களத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். மேற்படி நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரோ அதை நான் சீனிவாசன் என்பவருக்கு விற்றுவிட்டேன் என கூலாகச் சொல்ல, திரண்டிருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பூட்டை உடைப்பது என முடிவு செய்து அந்தப் பள்ளியின் பூட்டு
தகவல் : அதிரை M. அலமாஸ்
No comments:
Post a Comment