விழித்தெழுவோம் ஒன்றுபடுவோம்... இது தனிமனிதனின் கோரிக்கையல்ல நம்மூர் உறவுகளின் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையை வென்றெடுக்கும் கோரிக்கை, கிடைத்திருக்கும் இந்த வலைப்பூக்களின் விரிவாக்கத்தினை கொண்டு திரண்டெழுவோம் ஒன்று திரளுவோம் கொட்டி கொட்டிக் கொடுக்கும் நமது அன்னியச் செலவாவனிக்கு நாம் தான் கேள்விகள் கேட்கவேண்டும்.
அதிரைச் சகோதரர் அப்துல் ரஜாக் (media CHASECOM Service P.Ltd.) இந்திய இறையான்மை வழங்கியிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள் நிச்சயம் இவர்களின் மனுக்கு பதில் தந்தே ஆகவேண்டும் இதற்கு தென்னக ரயில்வே தப்பிக்க முடியாது.
இம்முயற்சிக்கு ஏதும் கைவிட்டுப் போகவில்லை, வெளிநாடுகளில் வாழும் அதிரைச் சமூக சகோதரர்களே, உங்களில் ஒன்றினைந்து அவரவர் வசிக்கும் நாடுகளில் இருக்கும் இந்தியத் தூரகத்திற்கு சென்று முறையாக அவர்களின் மூலமாக இந்திய தென்னக ரயில்வேயிக்கும், மத்திய இரயில்வே மந்திரிக்கும், தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து மனுக்களை அனுப்ப முயற்சிக்கவும்....
இங்கே கீழ் வைக்கப் பாட்டிருக்கும் கோரிக்கையால் தனிமனிதனோ அல்லது தனிப்பட்ட வர்க்கமோ பயனடையப்போவதில்லை, ஒவ்வொரு அதிரைப்பட்டினத்தில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் மற்றும் வெளியூர்களில் வாழ்ந்து வரும் அதிரை சகோதரர்களின் நலன் கருதியே என்று களம் காண்போமே.... இன்ஷா அல்லாஹ்!
---------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2011 - 2012 வரவு செலவு திட்டத்திலும் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் அறிந்ததே... தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் அடுத்த 3 ஆண்டுகளிலும் இதற்க்கான வாய்ப்பு தெரியவில்லை.இருந்த போதிலும் முயற்ச்சியை கை விட கூடாது, மேலும் உண்மை நிலவரத்தை அறியவும், ," தகவல் அறியும் உரிமை" ( Right to Information Act ) சட்டத்தின் கீழ் , ரயில்வே நிர்வாகத்திற்கு மனு எழுதி நேற்றைய தினதன்று அனுப்பியுள்ளோம்.. இதற்க்கான பதில் 45 நாட்காளில் பதிலை ரயில்வே நிர்வாகம் கொடுத்தாக வேண்டும்.அதன் அடிப்படையில் மேற்கொண்டு நம் முயற்சியை தொடருவோம்.
வெளி நாடுகளில் வசிக்கும் சகோதர்களுக்கு , சிறிய வேண்டுகோள் :
அங்குள்ள பொது அமைப்பின் மூலமாக, Ministry of Foriegn Affairs, Ministry of Railways, & Chief Minister of Tamil nadu இவர்களுக்கு நமது அகல ரயில் பாதை கோரிகையை அங்குள்ள EMABSSAY மூலமாக தொடர்ந்து அனுப்பிவைக்க வேண்டுகிறோம்..
ஓன்றுபட்டு முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நம் நல்ல சிந்தனைகள் செயல் வடிவம் பெரும்.
தங்கள் அன்புள்ள
ABDUL RAZAK
Media CHASECOM Services P.Ltd.
0091 - 44 - 42052222 0091 - 44 - 42052222
இணைப்பு: தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கான மனுவின் நகல்
நன்றி - அதிரைநிருபர் குழு
தகவல் அதிரை M. அல்மாஸ்
தேர்தல் நேரம் என்பதால் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள அன்பு பாசமிகு உறவுகள் வந்து நம்மிடையே நம்பிக்கையூட்டும். மக்களே ஏமாறவேண்டாம். அன்னிய செலாவனியை அள்ளிகொடுக்கும் வெளிநாட்டு வாழ் அதிரைவாசிகளே இந்த கோரிக்கைக்கு வலு சேர்பதற்காக ஓர் இணையப் புரட்சியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம்.
கடந்த வருடம் அதிரையில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற ஏற்பாடுகள் அதிரைவாசிகளால் செய்யப்பட்டு சில அரசியல் சூழ்ச்சிகளால் முறியடிக்கப்பட்டது, இது
நன்றி - அதிரைநிருபர் குழு
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment