From: அதிரை ஃபாரூக் [mailto:athiraifarouk@gmail.com]
தவ்ஹீத் ஜமாஅத்தும் தேர்தல் நிலைபாடும்
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
தேர்தல் நெருங்கி விட்டால் எத்தனை சீட்டுகள் என்றுக் கேட்க ஆறு மாதத்திற்கு முன்பே அரசியல் வாதிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி நிற்கும் அமைப்புகளுக்கு மத்தியில் என் சமுதாயத்திற்காக எத்தனை சதவிகிதம் வாழ்வாதாரம் என்று ஆறு மாதத்திற்கு முன்பே போஸ்டர் அடித்து ஒட்டி அரசியல் வாதிகளை தனது அலுவலக கதவைத் தட்ட வைத்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.
தமுமுக ஆரம்பித்த காலத்திலிருந்தே தேர்தல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கொள்ளாமல் ஒரே நிலைப்பாட்டில் நிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். இணையதளத்தில் வெளியான தேல்தல் நிலைப்பாடும் தவ்ஹீத் ஜமாத்தும் என்றத் தலைப்பில் வெளியான தகவலைத் தருகிறோம். – ஃபாரூக்...
தவ்ஹீத் ஜமாஅத்தும் தேர்தல் நிலைபாடும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத இயக்கம் என்றாலும் சமுதாயத்துக்கு பயன் தரும் கோரிக்கைகளை வைத்து அதற்கேற்ப ஆதரவு நிலைபாட்டை எடுத்து வந்துள்ளது. எங்களுக்கு என்ன தருவாய் என்று பேரம் பேசாத இயக்கமாக தவ்ஹீத் ஜமாஅத் திகழ்கிறது.
தமுமுக வில் நாம் இணைந்திருந்த போது அதிமுகவை ஆதரித்தோம்.
பின்னர் திமுகவை ஆதரித்தோம்.
பின்னர் அதிமுகவை ஆதரித்தோம்.
அதன் பின்னர் திமுகவை ஆதரித்தோம்.
இப்படி மற்றவர்களும் மாறி மாறி ஆதரித்துள்ளனர்.
ஆனால் திமுகவை அவர்கள் ஆதரிக்கும் போது அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் முன்னர் அவர்கள் ஆற்றிய உரைகளை தங்கள் இணைய தளத்தில் இருந்து நீக்கி விடுவார்கள்.
அது போல் அவர்கள் அதிமுகவை ஆதரிக்கும் போது திமுகவுக்கு ஆதரவாகவும் அதிமுகவுக்கு எதிராகவும் ஆற்றிய உரைகளை நீக்கி விடுவார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இப்போது அதிமுகவை ஆதரிக்கும் போது முன்னர் ஆற்றிய உரை தங்களுக்கு அதிமுகவிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைப்படுவது ஒரு காரணம்.
ஆதரிக்கும் போதும் எதிர்க்கும் போதும் எல்லா வரம்புகளையும் மீறி நடந்து கொண்டது இரண்டாவது காரணம்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தேர்தலின் போது எடுத்த அனைத்து நிலைபாடுகள் சம்மந்தப்பட்ட உரைகளையும் நாம் நீக்கவில்லை. காரணம் யாரை ஆதரித்தாலும் அவர்கள் செய்த கொடுமையையும் மறவாமல் சுட்டிக்காட்டி விட்டு இன்ன காரணத்தால் ஆதரிக்கிறோம் என்று தான் பிரச்சாரம் செய்வோம்.
தமுமுகவில் நாம் இனைந்திருந்த போது அதிமுகவை ஆதரித்தோம். திமுகவை எதிர்த்தோம்.
அந்த உரை இதோ
ஊழலா மதவாதமா
அதிமுகவை ஆதரித்து நாம் செய்த பிரச்சாரம்
ஜெயலலிதாவை ஆதரித்தது ஏன்
பின்னர் திமுகவை ஆதரித்த போது நாம் ஆற்றிய உரை
திமுகவை ஆதரித்தது ஏன்
இப்படி தேர்தலில் ஆதரவு நிலை எடுக்கும் போதும் வரம்பு மீறாமல் எச்சரிக்கையாக நடந்து கொண்டோம்.
எல்லை மீறாதே
இந்த நேரத்தில் மட்டும் ஒற்றுமை கோஷம் பலமாக கேட்கும். எல்லாம் ஓட்டுப் பொறுக்கத் தான். இது போலி ஒற்றுமை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலும் நாம் விளக்கம் அளித்துள்ளோம்.
அனைவரும் ஒன்று பட முடியாதா
ஒற்றுமை கோஷமும் ஓரிறைக் கொள்கையும்
முஸ்லிம்கள் ஓரணியில் திரள என்ன வழி
இஸ்லாத்தில் ஒற்றுமை
அன்பான அழைப்பு
ஒற்றுமையின் அவசியம்
பிரிவினை ஏன்
இது தான் ஒற்றுமையா
ஒற்றுமைக்கு ஏற்ற வழி
சத்தியப்பாதையும் சமுதாய ஒற்றுமையும்
மேலும் தேர்தலில் தாங்கள் ஈடுபட்டு சமுதாய தொண்டாற்றப் போவதாக பம்மாத்து காட்டுவார்கள். சட்டமன்றத்தில்சமுதாயத்தின் குரலை எதிரொலிக்கப் போவதாகக் கூறுவார்கள். அத்தனையும் பாசாங்கு என்ப்தையும் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.
தேர்தலில் எத்தகைய நிலைபாடு சரி
தேர்தலில் முஸ்லிம் அமைப்புகளை ஆதரிக்கலாமே
வேண்டாம் தேர்தல் ஆசை
தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் நின்றால் என்ன
தவ்ஹீத் ஜமாஅத் அரசியலில் நுழையுமா
நன்மை செய்யாத அரசியல்வாதிகளுக்கு ஏன் ஓட்டு?
அரசியல் அதிகாரம் முஸ்லிம்களுக்கு எப்படி கிடைக்கும்
தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் அதிகாரம் எப்படி
வாரியப்பதவி ஆசை வந்து விட்டதா
தமுமுகவை ஆதரிப்பது முஸ்லிம்களின் மார்க்கக் கடமைபோல் சித்தரிக்கப்படுகின்றது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள
தமுமுகவை விட்டு விலகியது ஏன்
தமுமுகவின் கேள்விகளுக்கு பதில்
தமுமுக தோற்றமும் பிரிவினையும்
தமுமுக சொத்தை பீஜே எடுத்துக் கொண்டாரா
மாற்றுக்கருத்துடையவர்களின் கேள்விகள்
தகவல் : அதிரை அல்மாஸ்
No comments:
Post a Comment