இந்தியாவின் வளர்ச்சியை சீனா ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது, மேலும் அதன் வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவே கருதுகிறது. சீனப் பிரதமரின் இந்தியப் பயணம், இருநாடுகளின் உறவுகளுக்கான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், வளர்ந்து வரும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் வென் ஜியாபோ கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வென் ஜியாபோவின் வருகையால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவுகள் மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக சீன பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment